Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தூர் டெஸ்ட் ஆடுகளம்.. மோசம் என அறிவித்த ஐசிசி.. கிரிக்கெட் போட்டியை நடத்த முடியாத சூழல்

இந்தூர் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி மூன்றாவது நாள் தொடக்கத்திலேயே முடிவடைந்தது. முதல் நாள் ஆட்டத்திலேயே 14 விக்கெட்டுகள் விழுந்தது.

இதன் காரணமாக இந்த ஆடுகளம் குறித்து ஐசிசி தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

மோசம்

மோசம்

ஆடுகளத்தின் தன்மை குறித்து ஐசிசி டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஒவ்வொரு தரச் சான்றிதழ் வழங்கும். இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சராசரி என முத்திரை குத்திருந்த ஐசிசி , தற்போது இந்தூர் டெஸ்ட் போட்டிக்கு மோசமான ஆடுகளம் என்று தரச் சான்றிதழ் கொடுத்துள்ளது.இதன் மூலம் இந்தூர் மைதானத்திற்கு மூன்று புள்ளிகள் மைனஸ் ஆக வழங்கப்பட்டுள்ளது.

சமநிலையில் இல்லை

சமநிலையில் இல்லை

எனினும் இது குறித்து பிசிசிஐ மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது .ஒரு மைதானம் 5 ஆண்டு காலத்தில் ஐந்து மைனஸ் புள்ளிகளை பெற்றிருந்தால் அந்த மைதானத்தில் ஒரு ஆண்டுக்கு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து விளக்கம் அளித்துள்ள போட்டி நடுவர் ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததாகவும் பேட்டுக்கும் பந்திற்கும் சமநிலையில் ஆடுகளம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்

சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்

முதல் பந்தின் தொடக்கத்தில் இருந்தே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார். போட்டி நடுவர் கிறிஸ் பிராடு ஆட்டத்தின் ஐந்தாவது பந்து கணிக்க முடியாத அளவிற்கு பந்து திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஆட்டம் முழுவதும் பந்தின் பவுன்ஸ் நிலையற்ற தன்மையில் கணிக்க முடியாத அளவிற்கு அபாயகரமாக இருந்ததாகவும் அவர் தரச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் மாற்றம்

கடைசி நேரத்தில் மாற்றம்

இந்த போட்டியில் விளையாடிய விராட் கோலி கூட பந்தை கணிக்க முடியாத அளவிற்கு பந்து எம்பி அவரது கையில் காயத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும் உண்மையான அட்டவணைப்படி இந்த போட்டி தர்மலாவில் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் இந்தூரில் மாற்றப்பட்டதால் கள பராமரிப்பாளர்களால் முறையாக ஆடுகளத்தை தயாரிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 3, 2023, 23:12 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+