For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க தான் அன்னைக்கே சொன்னோம்ல.. அவர் தான் பெஸ்ட்.. சச்சினை மீண்டும் சீண்டிய ஐசிசி.. வெடித்த சர்ச்சை

Recommended Video

ICC says Ben Stokes is greatest player of all time

மும்பை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் காலத்தை தாண்டிய சிறந்த வீரர் என மீண்டும் குறிப்பிட்டுள்ளது.

அந்த கருத்தோடு, அவருடன் சச்சின் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறது. அது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சச்சினை அவமானப்படுத்தும் வகையில் இது போன்ற கருத்தை ஏன் ஐசிசி மீண்டும், மீண்டும் கூறுகிறது? என ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

உலகக்கோப்பையின் போது..

உலகக்கோப்பையின் போது..

முதல் முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து தப்பித்து, உலகக்கோப்பை வென்றது. அப்போது சச்சின் பென் ஸ்டோக்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருதை அளித்தார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

அந்த புகைப்படத்தை போட்டு எந்த காலத்திலும் சிறந்த வீரருடன் சச்சின் இருக்கிறார் என குறிப்பிட்டு இருந்தது ஐசிசி. அப்போதே அந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்திய ரசிகர்கள் ஐசிசி-யை வறுத்து எடுத்தனர்.

மீண்டும் ஒப்பீடு

இந்த நிலையில், ஆஷஸ் 3வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய வெறியாட்டத்தால் தோல்வி அடைய வேண்டிய இங்கிலாந்து, நம்பவே முடியாத வகையில் வெற்றி பெற்றது. அதனால், அந்த பழைய புகைப்படத்தை மீண்டும் குறிப்பிட்டு, "நாங்க முன்பே கூறினோமே" என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

புள்ளிவிவரம் என்ன?

புள்ளிவிவரம் என்ன?

சச்சினுடன் ஒப்பிட்டால் ஆல்-ரவுண்டராக கூட பென் ஸ்டோக்ஸ் கால் கிணறு கூட தாண்ட மாட்டார் என்பதே உண்மை. பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் சராசரி டெஸ்டில் 35, ஒருநாள் போட்டிகளில் 40. அதே போல, அவர் 55 டெஸ்ட்களில் 135 விக்கெட்களும், 95 ஒருநாள் போட்டிகளில் 70 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார்.

உச்சியில் சச்சின்

உச்சியில் சச்சின்

சச்சின் எடுத்த ரன்கள், அடித்த சதங்கள் எல்லாம் இன்றும் பெரிய சாதனைகளாக உள்ளது. விராட் கோலி மட்டுமே சச்சினை நெருங்குவார் என கூறப்படுகிறது. பலரும் கோலி பல வசதிகளும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழலும் நிலவும் இந்த காலத்தில் தான் ரன் அடிக்கிறார். இவை இல்லாமலேயே சச்சின் ரன் மெஷினாக இருந்தார் என கூறி வருகின்றனர்.

சர்ச்சையும் உண்டு

சர்ச்சையும் உண்டு

மேலும், பென் ஸ்டோக்ஸ் பெரிய சர்ச்சைகளில் எல்லாம் சிக்கி இருக்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன் போட்டியில் தோல்வி அடைந்ததால், மது அருந்தி விட்டு, தெருவில் தகறாறு செய்து ஒருவரை பலமாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு அதில் இருந்து தப்பி வந்தார்.

இரண்டு இன்னிங்க்ஸ் போதுமா?

இரண்டு இன்னிங்க்ஸ் போதுமா?

அப்படிப்பட்ட பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை இறுதிப் போட்டி. ஒரு சிறந்த ஆஷஸ் வெற்றிக்கான இன்னிங்க்ஸ் ஆடியதால் மட்டுமே காலம் தாண்டிய சிறந்த வீரர் ஆகி விட முடியுமா? என கேட்டு ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். அவற்றில் சில -

ஸ்மித் தான் பெஸ்ட்

பென் ஸ்டோக்ஸ் தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் கூட சிறந்தவர் இல்லை. ஸ்மித் தான் சிறந்த வீரர் என ஆஷஸ் தொடரில் ரன் மழை பொழிந்து வரும் ஸ்டீவ் ஸ்மித்தை சுட்டிக் காட்டி கூறி ஐசிசி-யை அசிங்கப்படுத்தி உள்ளார்.

அம்பயர் முடிவுகளால் வெற்றி

உலகக்கோப்பை இறுதிப் போட்டி மற்றும் ஆஷஸ் தொடரில் மோசமான அம்பயர் முடிவுகளால் தான் வெற்றி பெற்றது இங்கிலாந்து. அந்த போட்டிகளில் வெற்றி கிடைக்காமல் போயிருந்தால், பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் சிறந்த இன்னிங்க்ஸ் என்பதோடு நின்று இருக்கும் என கூறி இருக்கிறார்.

ட்விட்டர் இல்லை

90களில் சச்சின் தனி ஆளாக இந்திய அணியை தோளில் தாங்கினார். அப்போது அதைப் பற்றி பேச ட்விட்டர் இல்லை என சச்சின் எத்தனை போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்க நம்புவோம்னு நினைக்காதீங்க

நீங்க சொல்றதை எல்லாம் நாங்க நம்புவோம்னு நினைக்காதீங்க. சச்சின் தான் எப்போதும் சிறந்த கிரிக்கெட் வீரர். மற்றவர்கள் அதன் பின் வந்தவர்கள் தான். புரியுதா?

ரன்கள், பேட்டிங் சராசரி

சச்சின் அடித்த ரன்கள், பேட்டிங் சராசரி ஆகியவற்றோடு, பென் ஸ்டோக்ஸ் ரன்கள், சராசரியை ஒப்பிட்டுள்ளார். சதம் பற்றி பேச வேண்டுமா? என்றும் கேட்டு அதிர விட்டுள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Wednesday, August 28, 2019, 12:42 [IST]
Other articles published on Aug 28, 2019
English summary
ICC says Ben Stokes is greatest player of all time, even better than Sachin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+