ICC T20 Rankings.. சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்.. பவுலிங்கில் இவரை தவிர வேறு இந்தியர் இல்லை
மும்பை : டி20 உலக கோப்பை போட்டி வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஐசிசி தற்போது டி20 போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்திய அணி சமீபகாலமாக எந்த ஒரு டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. மேலும் சூரிய குமார் யாதவும் காயம் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

எனினும் சூரியகுமார் யாதவும் 861 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரும் கே கே ஆர் அணியை சேர்ந்த பில் சால்ட் 802 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 781 புள்ளிகளுடன், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.
ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்கரம் உள்ள நிலையில் ஆறாம் இடத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இருக்கிறார்.இவர்களை தவிர 11வது இடத்தில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் உள்ளார்.டி20 உலக கோப்பையில் சேர்க்கப்படாத ரிங்கு சிங் ஒரு இடம் முன்னேறி 31 வது இடத்தில் உள்ளார். விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 46-வது இடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா தற்போது 51-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் அக்சர் பட்டேல் மட்டுமே இருக்கிறார்.முதல் இடத்தில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித்,இரண்டாவது இடத்தில் இலங்கை வீரர் ஹசரங்கா, மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹக்கீல் உசேன், நான்காவது இடத்தில் அக்சர் பட்டேல், ஐந்தாவது இடத்தில் இலங்கை வீரர் தீக்சனா மற்றும் இந்திய வீரர் ரவி பிஸ்னாய் ஆகியோர் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இவர்களை தவிர அடுத்த இந்தியர் என்றால் தரவரிசையில் 19-வது இடத்தில் ஆர்ஸ்தீப் சிங் இருக்கிறார். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 24 ஆவது இடத்திலும், சாஹல் 49-வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 62 ஆவது இடத்திலும், சிராஜ் 79வது இடத்திலும், முகேஷ் குமார் 81வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் ஸ்டார் வீரர் பும்ரா முதல் 100 இடங்களில் இல்லை என்பது சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications