Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகப்பெரிய அப்டேட்.. டி20 உலகக் கோப்பையை நடத்தும் நாடு இதுதான் - பாகிஸ்தான் அறிவிப்பு

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடருக்கு விரைவில் விடிவு காலம் கிடைத்துவிடும் போல.. வந்திருக்கும் அப்டேட் அப்படி.

இந்தியாவில் கொரோனா பரவல் தாண்டவமாடுகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல், மே மாதம் உச்சத்தில் இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது.

இதனால், வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் தொடரையே பாதியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

 எப்போது?

எப்போது?

இதுஒருபுறமிருக்க, கொரோனா பரவல் காரணமாக, உலகக் கோப்பை டி20 தொடரை எப்போது நடத்துவது என்பதிலும் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. கடந்த மே.29ம் தேதி நடந்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில், ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன், செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 சாத்தியம் இல்லை

சாத்தியம் இல்லை

அதேசமயம், உலகக் கோப்பை டி20 தொடரை இந்தியாவில் நடத்துவது குறித்து வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து ஆலோசிக்க மேலும் கால அவகாசம் தேவை என்று ஐசிசி-யிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. அதை ஐசிசியும் ஏற்றுக் கொண்டது. எனினும், இந்தியாவில் தற்போதைய சூழலில், உலகக் கோப்பை மாதிரியான மிகப்பெரிய தொடர்களை நடத்துவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பது நேற்று பிறந்த குழந்தைக்கும் தெரியும்.

 பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் அறிவிப்பு

இந்த நிலையில் தான், உலகக் கோப்பை டி20 தொடர் அமீரகத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏசன் மணி, "இந்தியாவில் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கொரோனா வைரஸ் காரணமாக, அமீரகத்தில் நடத்தப்படும்" என்று தெரிவித்ததாக thenews.com.pk செய்தி வெளியிட்டுள்ளது.

 ஐபிஎல்-லுக்கு பிறகு

ஐபிஎல்-லுக்கு பிறகு

ஆனால், டி20 உலகக் கோப்பை 2021 தொடரை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருக்கும் போது, இத்தொடர் அமீரகத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் எப்படி அறிவிக்கிறது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதேபோல், ஐபிஎல் தொடரும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் அமீரகத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் வாரிய தலைவரின் அறிவிப்பை வைத்து பார்க்கும் போது, ஐபிஎல் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு பிறகு உலகக் கோப்பை டி20 தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, June 5, 2021, 20:02 [IST]
Other articles published on Jun 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+