Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை இந்திய அணியில் குழப்பம்.. 4 இடத்திற்கு 8 பேர் போட்டி.. யாரை சேர்ப்பது ? யாரை விடுவது?

மெல்போர்ன்: 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் யாரை விடுவது யாரை சோப்பது என்ற குழப்பம் இன்னமும் நீடிக்கிறது.

Recommended Video

T20 World Cup இந்திய அணியின் Bowling Unit குறித்து Sunil Gavaskar கருத்து Cricket

டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இன்னும் பிளேயிங் லெவனை இந்திய அணி தீர்மானிக்கவே இல்லை.

டாப் 4 வீரர்கள் மட்டும் தான் முடிவாகி உள்ள நிலையில், முக்கியமான 4 இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது.

விக்கெட் கீப்பர் யார்?

விக்கெட் கீப்பர் யார்?

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தற்போது முன்வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. அதற்காக ரிஷப் பண்டை சேர்த்தால், அவர் ஃபினிஷர் ரோலுக்கும் சரியான நபராக இல்லை. இதனால் ரிஷப் பண்டை தொடக்க வீரராக தான் களமிறக்க வேண்டும் என்றால், அங்கு ராகுல் இருக்கிறார். மறு புறம் தினேஷ் கார்த்திக் , ஃபினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இதனால் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னமும் தெரியவில்லை.

சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்

சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்

இந்திய அணியில் ஜடேஜா தற்போது காயம் காரணமாக இல்லை. இதனால் தற்போது அந்த இடத்திற்கு அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளரான பட்டேல், பேட்டிங்கிலும் தற்போது முன்னேறி வருகிறார். ஆனால், அக்சர் பட்டேல் பேட்டிங்கின் வலு குறைந்தே காணப்படும். இதனை சரி செய்ய தீபக் ஹூடாவை பயன்படுத்தலாம். ஆனால் ஹூடா, பட்டேல் அளவுக்கு நல்ல சுழற்பந்துவீச்சாளர் கிடையாது. இதனால் அங்கும் ஒரு குழப்பம் நீடிக்கிறது.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியும் தற்போது வந்துள்ளது. சாஹல், அணியில் முக்கிய வீரராக இருக்கிறார்.மேலும் அவருடைய லெக் ஸ்பின், ஆஸ்திரேலிய ஆடுகளத்துக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும். அதே வேலையில், அஸ்வின் நல்ல பேட்ஸ்மேனாக இருப்பதால், அவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை இந்திய அணி ஹர்திக்கை 3 வது வேகப்பந்துவீச்சாரளாக பயன்படுத்தினால், இருவருக்கும் இடம் கிடைக்கும்.

3வது வேகப்பந்துவீச்சாளர்

3வது வேகப்பந்துவீச்சாளர்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுக்கு பும்ரா, புவனேஸ்வர் குமார் தங்களுடைய இடத்தை உறுதி செய்த நிலையில், 3வது வீரர் யார் என்ற போட்டியில் ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங் உள்ளனர். ஆர்ஸ்தீப் ரன்களை கட்டுப்படுத்த கூடியவர். ஆனால் விக்கெட்டுகளை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஹர்சல் பட்டேல் விக்கெட் எடுப்பார். ரன்கள் கொஞ்சம் போக வாய்ப்பு உள்ளது. மேலும் பேட்டிங்கும் அவருக்கு வரும். இதனால் இங்கேயும் குழப்பம் நீடிக்கிறது.

Story first published: Wednesday, September 14, 2022, 16:04 [IST]
Other articles published on Sep 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+