Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிட்னியில் தக்காளி சட்னியான நெதர்லாந்து.. இந்தியாவின் 25வது டி20 வெற்றி.. பந்துவீச்சாளர்கள் அபாரம்

சிட்னி : டி20 உலககோப்பையில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சிட்னி ஆடுகளத்தில் ஏற்கனவே இன்று தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் விளையாடினர். மீண்டும் அதே ஆடுகளத்தில் போட்டி நடைபெறும் என்பதால், பேட்டிற்கு பந்து சரிவர வரவில்லை.

இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோகித் சர்மா அதிரடி

ரோகித் சர்மா அதிரடி

தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல், ரோகித் சர்மா ரன்களை சேர்க்க தடுமாறினர். இதனால் ராகுல் 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். எனினும் அவர் டிஆர்எஸ். முடிவை எடுத்திருந்தால், காப்பாற்றப்பட்டு இருப்பார். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சீரான வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தினர். ஒருபுறம் விராட் கோலி நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடி காட்டினார்.

180 ரன்கள் இலக்கு

180 ரன்கள் இலக்கு

39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களை விளாசி ஒரு கட்டத்தில் அவுட்டானார்.கடைசி நேரத்தில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் கியரை மாற்றினார். இருவருமே அதிரடியாக ரன் வேட்டை நடத்த தொடங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் அவருடைய 37வது அரைசதம் இதுவாகும். மறுபுறம் வழக்கம் போல் அசத்திய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்களை குவித்துள்ளது.

தடுமாறிய நெதர்லாந்து

தடுமாறிய நெதர்லாந்து

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தார். இதனையடுத்து ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் தொடக்க வீரர் விக்ரமிஜித் சிங்கை புவனேஸ்வர் குமார் போல்ட் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து பவர்பிளேக்குள் பந்து வீசிய அக்சர் பட்டேல் பால் டீ லீட் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய பவுலர்கள் அபாரம்

இந்திய பவுலர்கள் அபாரம்

இதே போன்று அஸ்வினின் மாய ஜால சூழலை சிக்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் ஆக்கர்மேன், குப்பர் ஆகியோர் ஒரே ஓவரில் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். அதிகபட்சமாக பிரிங்கிள் 20 ரன்கள் எடுத்த நிலையில் மகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் அக்சர் பட்டேல் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஹாட்ரிக் வாய்ப்பை வீணடித்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தது. 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. இது நடப்பாண்டில் டி20 போட்டியில் இந்தியாவுக்கு 25வது வெற்றியாகும்.

Story first published: Thursday, October 27, 2022, 16:07 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+