மும்பை : 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் மே ஒன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு இந்த தொடரில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார் என்று ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார். இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் ஒரு பெரிய டெஸ்ட் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்திய அணி t20 உலக கோப்பையை வென்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பலமுறை டி20 உலக கோப்பையில் விளையாடியும் அரை இறுதியை தாண்ட முடியவில்லை. இந்த நிலையில் கடைசியாக விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் 2024 டி20 உலக கோப்பையில் வாய்ப்பு தரப்படும் என்று செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது 2007 ஆம் ஆண்டு எப்படி எந்த ஒரு ஸ்டார் வீரரும் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ அனுப்பியதோ அதேபோல் ஒரு யுத்தியை இம்முறை பயன்படுத்தலாமா என்ற ஆலோசனை நடத்தி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு வயதாகிவிட்டது. மேலும் ஐபிஎல் தொடர்களும் பெரிய அளவில் அவர்கள் சாதிக்கவில்லை.
ரன்கள் இருவரும் அடித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் பல இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக யார் என்றே தெரியாத ஆஸ்டோஷ் சர்மா, ஷசாங் சிங் போன்ற வீரர்கள் எல்லாம் தனி ஆளாக நின்று போட்டியை மாற்றி வருகிறார்கள்.
இதனால் இம்முறை ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லாமல் இளவீரர்கள் கொண்ட அணியை அனுப்பலாமா என்ற யோசனையில் தேர்வு குழு இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி ஜெய்ஸ்வால், கில் சூரியகுமார் யாதவ், ஆஷ்டோஷ் சர்மா,ஷாஸாங் சிங், ரியான்பராக் சஞ்சு சாம்சன், ஆவேஸ் கான், மாயிங் யாதவ் போன்ற வீரர்களை தேர்வு செய்து அனுப்பலாமா என்ற யோசனையும் ஏற்பட்டிருக்கிறது.