Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுவுக்கு சூப்பர் யோசனை

மும்பை : 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தற்போது பாதி கட்டத்தை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இன்னும் ஒரு மாதம் நடைபெற உள்ள நிலையில் டி20 உலக கோப்பைக்கான ஆயுத்த வேலைகளும் நடைபெற்று வருகிறது. மே ஒன்றாம் தேதிக்குள் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்து இருக்கிறார். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

icc t20 world cup 2024 - Irfan pathan selected 15 member squad for team india

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருப்பவர் கேப்டன் ரோகித் சர்மா அனைவரின் மனதிலும் ரோகித் சர்மாவுக்கு ஜோடியாக யார் தொடக்க வீரராக களம் இறங்கப் போகிறார் என்ற கேள்விதான் இருந்தது. அதற்கு தற்போது ஜெய்ஸ்வால் தன்னுடைய அதிரடி சதத்தால் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதனால் இர்ஃபான் பதான் ரோகித் சர்மாவையும் ஜெயிஸ்வாலையும் தொடக்க வீரராக சேர்த்திருக்கிறார். இதேபோன்று இர்பான் பதான் தன்னுடைய அணியில் மூன்றாவது வீரராக விராட் கோலி சேர்த்திருக்கிறார். இதேபோன்று நான்காவது வீரராக மும்பை இந்தியன்ஸ் சேர்ந்த அதிரடி வீரர் சூரியகுமார் யாதவுக்கு இர்ஃபான் பதான் இடம் கொடுத்திருக்கிறார். ஐந்தாவது வீரராக இர்ஃபான் பதான் ரிஷப் பண்ட், தன்னுடைய அணியில் இடம் கொடுத்திருக்கிறார்.

உலகக் கோப்பையில் யார் விக்கெட் கீப்பராக இருக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இர்பான் பதான், ரிஷப் பண்ட்க்கு தான் இடம் கொடுத்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவை தன்னுடைய அணியில் சேர்த்திருக்கும் இர்ஃபான் பதான், அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பந்து வீசினால் மட்டுமே அவரை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

எட்டாவது வீரராக அதிரடி வீரர் ரிங்கு சிங்கும், 9வது வீரராக ஜடேஜாவையும் பத்தாவது வீரராக குல்தீப் யாதவையும் இர்ஃபான் பதான் சேர்த்திருக்கிறார். இதே போன்று வேகபந்துவீச்சாளராக முகமது சிராஜ்,பும்ரா,ஆர்ஸ்தீப் என மூன்று வீரர்களை சேர்த்துள்ள இர்பான் பத்தான் 14வது வீரராக ரவி பிஸ்னாய் அல்லது சாகல் ஆகியோரை சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று 15 வது வீரராக கூடுதலான தொடக்க வீர்ர வேண்டும் என்றால் சுப்மன் கில் அல்லது ஒரு விக்கெட் கீப்பர் கூடுதலாக வேண்டுமென்றால் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் விக்கெட் கீப்பர் மற்றும் ஒரு பேட்ஸ்மேனையும் மாற்று வீரராக தேர்வு செய்து அணியுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.

Story first published: Wednesday, April 24, 2024, 23:23 [IST]
Other articles published on Apr 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+