மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் மே மாதம் ஒன்றாம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருக்கிறது. இந்த நிலையில் அஜித் அகார்ருக்கு தலைமையிலான தேர்வு குழுவினர் இந்திய அணியில் எந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து யோசித்து வருகின்றனர்.
இந்திய அணியில் பல்வேறு இடங்கள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரராக யார் இருக்கப் போகிறார் என்ற சந்தேகம் இருந்தது ஜெய்ஸ்வால் சதம் அடித்ததால் அதற்கான விடை கிடைத்துவிட்டது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட், அதிரடியாக விளையாடி வருவதால் முதன்மையான விக்கெட் கீப்பராக அவருடைய பெயர் தான் பரிசீலினையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்து சாம்சன் தான் இடம்பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மேலும் சஞ்சு சாம்சனை மாற்று தொடக்க வீரராக கூட பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் தேர்வுக்குழுவினர் சஞ்சு சாம்சனுக்கு பதில் கே.எல் ராகுலுக்கு தான் முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கே எல் ராகுல் மாற்று த்தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு முன்னுரிமை வழங்க முடிவெடுக்கப்படுகிறது.
இது சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளராகும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இரண்டு சுழற் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாவதாக சுழற் பந்துவீச்சாளரை சேர்க்கலாமா இல்லை வேகபந்து வீச்சாளரை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு இடத்திற்கு ரவி பிஷ்னாய், அக்சர் பட்டேல் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் 3 வீரர்களும் போட்டி போட்டு வருகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு வீரர் தான் தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏதேனும் ஒரு வீரர் தான் தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.