Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்ட்லேயே இல்லையே.. டி20 உலககோப்பையில் தோனிக்கு புதிய பொறுப்பு.. கேப்டன் ரோகித் இல்ல!

மும்பை : டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு தொடர் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் வரும் மே மாதம் ஒன்றாம் தேதிக்குள் அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இதனால் தேர்வுக்குழு தலைவர் அகாத்கர் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் மற்றும் இந்திய டி20 அணி கேப்டன் ரோஹித் ஆகியோர் இணைந்து என் இப்படிப்பட்ட அணியை தேர்வு செய்யலாம் என்பது குறித்து விரைவில் ஆலோசிக்க உள்ளனர்.

ICC T20 World cup 2024 - MS Dhoni should be Mentor for team india says Nanee

இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட அணியை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர் .தற்போது, கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் விமர்சகரமான நாணி, பிசிசிஐக்கு ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதில் டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் தல தோனியை மென்டராக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தோனி தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் சேர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் நாணி இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார். அனுபவம் வாய்ந்த தோனி அணியில் இருந்தால் நிச்சயம் அது ரோகித் சர்மாவுக்கு கூடுதல் பலமாக தான் இருக்கும். எனினும் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோனி இதே போல் பிசிசிஐ கேட்டுக் கொண்டதற்கு இணங்க மென்டராக வந்தார்.

ஆனால் அந்தத் தொடரில் இந்திய அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் தோனி மீது பல விமர்சனங்கள் வந்தது. இதனால் உங்கள் சகவாசமே வேண்டாம் என்று தோனி ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் கிரிக்கெட் விமர்சகர் நாணி மீண்டும் தோனி அந்த பொறுப்புக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்திருக்கிறார்.

இதைப் போன்று நாணி, தன்னுடைய பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார். அதன்படி தொடக்க வீரராக ருதுராஜ், ஜெய்ஸ்வால் ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள நாணி, நடுவரிசையில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரியான் பராக், ரிங்கு சிங் ஆகியோரை டி20 உலக கோப்பைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதேபோன்று ஆல்ரவுண்டர் ஜடேஜா, பும்ரா, மாயங் யாதவ், குல்தீப்,ஆர்ஸ்தீப் சிங் ஆகியோரை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நாணி, கேப்டனாக பும்ராவையும் துணை கேப்டனாக சஞ்சு சாம்சனையும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கூடுதல் வீரராக அபிஷேக் ஷர்மா ரிஷப் பண்ட், ஆஸ்டோஷ் சர்மா, சாகல், ஹர்ஷிட்ராணா ஆகியோரின் அணியில் சேர்க்க வேண்டும் என்று நாணி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, April 25, 2024, 6:30 [IST]
Other articles published on Apr 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+