For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டீங்களே.. டி20 உலக கோப்பை இந்திய அணியில் அதிரடி வீரர் நீக்கம்

மும்பை : டி20 உலக கோப்பையில் பங்கேற்க போகும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அடுத்த ஸ்டார் வீரராக உருவெடுத்த 26 வயதான ரிங்கு சிங் டி20 உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ICC T20 World cup 2024 - Rinku singh is axed from 15 member squad of indian team

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கே கே ஆர் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து இந்திய டி20 அணிகள் விளையாடி வந்த ரிங்கு சிங் பல போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார். இதனால் ரிங்கு சிங்கிற்கு எதிர்காலம் இருப்பதாக பலரும் பாராட்டி இருந்தனர்.

இந்திய அணியின் ஃபினிஷர் ஆக நீண்ட காலம் ஜொலிக்க வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து ரிங்கு சிங் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதனால் 15 பேர் கொண்ட மெயின் அணியில் ரிங்கு சிங் இடம்பெறவில்லை.

எனினும் டி20 உலக கோப்பையின் ரிசர்வ் வீரராக ரிங்கு சிங் அனுப்பப்படுகிறார். ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் ரிங்கு சிங் அந்த ரிசர்வ் அணியிலிருந்து மெயின் அணிக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் மெயின் அணியில் ரிங்கு சிங் இல்லாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ஜடேஜா, அக்சர் பட்டேல் என நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் குறிப்பாக நடுவரிசையில் இருக்கிறார்கள். இதில் பண்ட் பினிசராக செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் சிவம் துபே ஜடேஜா போன்ற வீரர்களும் இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் ரிங்கு சிங்கிற்கு மெயின் அணியில் இடம் கிடைக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

Story first published: Tuesday, April 30, 2024, 16:28 [IST]
Other articles published on Apr 30, 2024
English summary
ICC T20 World cup 2024 - Rinku singh is axed from 15 member squad of indian team இப்படி ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டீங்களே.. டி20 உலக கோப்பை இந்திய அணியில் அதிரடி வீரர் நீக்கம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+