For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே இடத்துக்கு 3 பேர் போட்டி..ராகுலை முந்திய சஞ்சு சாம்சன்..டி20 உலக கோப்பைக்கு செல்லப் போவது யார்?

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெறப் போகிறார் என்ற விவாதங்கள் தற்போது பெரிய அளவில் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விபத்து காரணமாக விளையாடாமல் இருந்த இந்திய அணியின் ஆஸ்த்தான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தன்னுடைய பார்மை நிரூபித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் இரண்டாவதாக விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு கேல் ராகுல் சீனியர் என்பதால் அவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் அவரை முந்திவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ICC T20 World cup 2024- Who will be the wicketkeeper for team india

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல விக்கெட் கீப்பர்கள் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதில் சஞ்சு சாம்சன், கே எல் ராகுல், ரிசப் பந்த், இசான் கிஷன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தற்போது ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார். 2024 ஆம் ஆண்டு சீசனில் 385 ரன்கள் அவர் குவித்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 77 என்ற அளவிலும் ஸ்டிரைக் ரேட் 161 என்ற அளவிலும் இருக்கிறது. சாம்சன் நடப்பு தொடரில் 4 அரை சதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கே எல் ராகுல் இருக்கிறார். இவர் 378 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால் சராசரி வெறும் 42 என்ற அளவில் இருக்கிறது. மேலும் கே.எல். ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 144 என்ற அளவில் தான் இருக்கிறது.

இவரை விட சஞ்சு சாம்சனின் ஸ்ட்ரைக் ரேட் அதிகம் என்பதால் சாம்சனுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் சஞ்சு சாம்சன் அணியில் இருந்தால் அவரை தொடக்க வீரராகவும் பயன்படுத்திக்கொள்ளலாம், இல்லை மூன்றாவது அல்லது நான்காவது வீரராகவும் பேட்டிங் வரிசையில் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் இல்லை என்றாலும் அவர் 9 போட்டிகளில் விளையாடி 212 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 23 என்ற அளவில் இருக்கிறது. எனினும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 165 என்ற அளவில் இருக்கிறது.

ரிஷப் பண்ட் தற்போதைய ஐபிஎல் தொடரில் 10 போட்டியில் விளையாடி 371 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 46 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 160 என்று அளவிலும் இருக்கிறது. மூன்று அரை சதம் உட்பட அதிகபட்சமாக 88 ரன்கள் குவித்து இருக்கிறார். ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு முதல் விக்கெட் கீப்பர் என்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனால் இரண்டாவது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, April 29, 2024, 17:01 [IST]
Other articles published on Apr 29, 2024
English summary
ICC T20 World cup 2024- Who will be the wicketkeeper for team india ஒரே இடத்துக்கு 3 பேர் போட்டி..ராகுலை முந்திய சஞ்சு சாம்சன்..டி20 உலக கோப்பைக்கு செல்லப் போவது யார்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+