Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - கத்துக்குட்டி அணிகள் அதிகம் இருப்பதால் போர் அடிக்குமா இந்த தொடர்?

மும்பை : இனி T 20 உலக கோப்பை போட்டி திருவிழா, வேகம் எடுக்கும்.
இந்த முறை பங்கு பெறும் 20 அணிகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டு புதிதல்ல. சில அணிகள் மிகவும் அனுபவம் மிக்கவை. சில அணிகள் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஆடிய அனுபவம் இல்லாதவை. இருந்தும் பங்கு பெறும் பல வீரர்களுக்கு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கூடிய தருணம், இந்த போட்டி.

பல காலமாக கிரிக்கெட் டெஸ்டுகள், ஒரு நாள் பந்தயங்கள் மற்றும் T 20 ஆட்டங்கள் ஆடி அனுபவம் சேர்த்துள்ள முன்னணி அணிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பு , எந்த அணி இந்த போட்டியில் முடிவில் வெற்றி பெறும் என்பதை நிரூபிக்க சாத்தியமாகும்.

t20 world cup kl rahul sanju samson virat kohli rohit sharma hardik pandya bcci india national cricket team 20

அவ்வளவாக அனுபவம் இல்லாத அணிகளுக்கு மகத்தான வாய்ப்பு அனுபவம் பெற. மேலும் சிறப்பாக விளையாடினால் போட்டியில் முன்னேறவும் முடியும் அடுத்த கட்டத்திற்கு.

முதல் முறையாக இந்த வகை போட்டியில் காலடி எடுத்து வைக்கும் அணிகளுக்கு, புது அனுபவம் காத்துக் கொண்டு இருக்கின்றது.
அவர்களுக்கும் நன்கு தெரியும் இப்படிப்பட்ட பெரிய போட்டிகளில் கலந்துக் கொள்வதே ஒரு பெரிய வாய்ப்பு என்று. மேலும் போட்டியில் பங்கு பெறப் போகும் மற்ற அணிகளுடன் விளையாட கிடைத்துள்ள சந்தர்ப்பம் அவர்களுக்கு தன்னம்பிக்கை மேலும் வலுப்படுத்த உதவும் என்று.

மற்ற சாத்தியங்கள். பல அணிகள் அதிரடி ஆட்டங்களை அடிப்படையாக கொண்டு ஆட வேண்டிய போட்டி இது. ரசிகர்களுக்கு பெரும்பாலான ஆட்டங்களில் அதிகப்படியான பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பார்க்க கூடிய சாத்தியம் அதிகம்.

கடைசி ஓவர் திரில்லிங் ஆட்டங்கள், விக்கெடுட் இழப்புகள், வெற்றி, தோல்வி கடைசி பந்து வரையில் (சில மேட்ச்சுகளில் ) போன்ற விறு விறுப்பு, பரபரப்பிற்கு பஞ்சமில்லா நிகழ்வுக்களும் சாத்தியங்கள்.பேட்டிங் சாத்தியங்கள் மாதிரி மிக சிறப்பான பந்து வீச்சுகள், பீல்டிங்கில் அட்டகாசமாக பந்து தடுப்புகள், அதிரடியான வேற லெவல் கேட்சுகள் பிடிக்கும் காட்சிகள், ஆகியவை ஆட்டத்தின் போக்கையே மாற்றும் சாத்தியங்களும் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.

சாத்தியங்களுடன் கலந்து சவால்களும் பங்களிக்கும் என்பதில் எந்த வகை கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. சவால்களில் முக்கியமானது, அழுத்தங்கள். மேட்ச் முடியும் தருவாயில் அதிகமாக உணரப்படும். தவறுகள், பதட்டத்தின் வெளிப்பாடுகள், பெற வேண்டும் ( ரன்களோ, விக்கெட்டுகளோ, கேட்சுகளோ) என்ற அவசர தன்மை, சூழ்நிலை புரியாமல் விளையாடி இழப்பது, செயல்பட முடியாமல் தவிப்பது இவை போன்ற சவால்களை சந்தித்து, எதிர்கொண்டு சமாளித்து மீண்டு வந்து சரி வர செயல்படுவதே ஒரு பெரிய சவால் ஆகும்.

இவற்றை தவிர மிக முக்கியமான சவால், வெற்றி பெறுவதற்கு ஆன காலம் மிகவும் குறுகியது. மொத்தமே 20 ஓவர்கள். அதற்குள் சாதகமான ரிசல்ட் பெறுவது என்பது அங்கு மைதானத்தில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் விளையாடும் வீரர்களுக்கு பெரிய சவால். மேட்ச் முடிவு நெருங்க நெருங்க யார் பக்கம் வேண்டுமானாலும் வெற்றி என்ற தருணங்களில் சந்திக்க வேண்டிய சவால்கள், தனி ரகம்.ஆக மொத்தம் இந்த போட்டியின் பெரும்பாலான எதிர்பாராத முடிவுகளை நோக்கி செல்லும் ஆட்டங்களில் சாத்தியங்களும், சவால்களும் கலந்திருக்கும்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, June 2, 2024, 16:18 [IST]
Other articles published on Jun 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+