For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை - யுவராஜ் சிங் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் XI.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்

நியூயார்க் : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் ஆட்டத்தை இந்திய நேரப்படி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் தொடரை ஆரம்பிக்கிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறப்பு தூதராக யுவராஜ் சிங்கை ஐசிசி நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வெல்லவில்லை.

ICC T20 World cup 2024- Yuvraj singh selects India playing xi

இந்த சூழலில் இந்தியா இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங், எந்த மாதிரி பிளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூறி இருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். என்னைக் கேட்டால் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஜெயிஸ்வாலும், கண்டிப்பாக இறங்க வேண்டும். விராட் கோலி அவருடைய வாழ்க்கை முழுவதும் நம்பர் மூன்றாவது வீரராக தான் இருக்கிறார்.

அதுதான் அவருடைய இடம் அதை மாற்றக்கூடாது. நான்காம் இடத்தில் சூரியகுமார் இருக்கின்றார்
இதனை அடுத்து நடு வரிசையில் இரண்டு பெரிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வலது கை பேட்ஸ்மேன், இடது கை பேட்ஸ்மேன் என இருப்பது போல் பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் பௌலர்கள் பந்து வீச கடினமாக இருக்கும். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை சேர்க்க வேண்டும். சாம்சன் நல்ல பார்மில் இருந்தாலும், பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மேலும் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆட்டங்களை வென்று தரக்கூடிய திறன் ரிஷப் பண்டிடம் இருக்கின்றது. டெஸ்ட் போட்டிகளை போல் ரிஷப் பண்ட்க்கு மிகப்பெரிய போட்டிகளில் கூட மேட்ச் வின்னர் ஆக மாறக்கூடிய திறமை இருக்கின்றது. இதேபோன்று ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஐபிஎல் தொடரை பார்த்தால் ஹர்திக் சரியாக விளையாடவில்லை. ஆனால் இந்தியாவுக்காக அவர் விளையாடிய ஆட்டங்களை பார்த்தால் நிச்சயம் அவர் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமாகும். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கை விட பவுலிங் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். அவருக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் என நம்புகிறேன்.

சிவம் துபே அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதே அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். இல்லை என்றாலும் அணியில் இருப்பதே சிறந்ததாக நான் கருதுகின்றேன். எனினும் அவருக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு வழங்கினால், நிச்சயம் அவர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். கில் போன்ற வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறாதது மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். இதேபோன்று பும்ரா, சிராஜ் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களுமே திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமாகும்.

Story first published: Wednesday, May 22, 2024, 15:27 [IST]
Other articles published on May 22, 2024
English summary
ICC T20 World cup 2024- Yuvraj singh selects India playing xi டி20 உலககோப்பை - யுவராஜ் சிங் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் XI.. 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+