Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 இந்திய வீரர்களுக்கு இது தான் கடைசி டி20 போட்டி.. ரன் ரேட் காரணமாக அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா

கொழும்பு : 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக இந்த தொடரில் நடைபெற்றது. முதல் தொடர் தென்னாப்பிரிக்காவிலும், இரண்டாவது தொடர் இங்கிலாந்திலும், மூன்றாவது தொடர் வெஸ்ட் இண்டீசிலும் நடைபெற்றது.

இந்த நிலையில் நான்காவது இந்த தொடர் இலங்கையில் நடைபெற்றது. இந்த தொடரில் தான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் ஆகவும் அமைந்தது.

T20 world cup virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20

ஏனென்றால் இந்திய அணியின் ஜாம்பவான்களான பாலாஜி, ஜாகிர் கான், இர்பான் பதான்,சேவாக் ஆகிய வீரர்கள் கடைசியாக டி20 போட்டிகள் விளையாடியது இதுதான். அது மட்டுமல்லாமல் இந்திய அணி இந்த தொடரில் நல்ல விதத்தில் செயல்பட்டும்,ரன் ரேட் காரணமாக அரையிறுதி வாய்ப்புக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.

இந்திய அணி இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடினர். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் இந்திய அணி 80 ரன்களில் எல்லாம் இங்கிலாந்தை சுருட்டியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 170 ரன்களும் இங்கிலாந்து அணி 80 ரன்கள் எடுத்தது.இதில் ஹர்பஜன் சிங், 12 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் இங்கிலாந்து அணியின் குறைந்தபட்ச t20 ஸ்கோர் ஆகும். இந்த இரு வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர் 8 சுற்றில் F பிரிவில் இருந்த இந்திய அணி ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் மோதியது. இதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு இந்திய அணி முதல் ஆட்டத்தில் விளையாடியது. இதில் இந்திய அணி 140 ரன்கள் மட்டுமே எடுக்க இதனை ஆஸ்திரேலியா 14.4 ஓவர்கள் எல்லாம் எட்டியது. இதன் காரணமாக இந்தியாவில் ரன் ரேட் பாதிக்கப்பட்டது.

இதன் அடுத்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுக்க, இதனை இந்தியா 17 ஓவர்கள் எல்லாம் எட்டியது. இதன் மூலம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 78 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் பாலாஜி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னும் அதிக பந்துகள் எழுதிய நிலையில் வெற்றி பெற்று இருந்தால் அது ரன் ரேட் உயரஉதவி செய்திருக்கும். வெறும் கடைசி போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது. இதில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்த சுற்றுக்கு சென்று இருக்கலாம். ஆனால் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விறுவிறுப்பாக அமைந்தது. இதுதான் பாலாஜி, ஜாகிர் கான்,இர்ஃபான் பதான், சேவாக் ஆகியோர் விளையாடிய கடைசி டி20 போட்டி ஆகும். இதன் மூலம் நாக்அவுட் சுற்றுக்கு இலங்கை பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் இலங்கை எளிதாக வென்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் இலங்கை அணி 101 ரன்களில் சுருண்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சாம்பியன் பட்டதை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இந்த தொடரில் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி நான்கு போட்டிகள் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Story first published: Thursday, May 30, 2024, 10:08 [IST]
Other articles published on May 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+