Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்த கோலி.. அஸ்வின் கொடுத்த நாக் அவுட் பஞ்ச்.. ராகுல் அதிரடியால் இந்தியா இமாலய இலக்கு

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வங்கதேச அணியில் சௌமியா சர்கார் நீக்கப்பட்டு, கூடுதல் ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்த்தது.

இதனையடுத்து கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் வங்கதேச அணியின் முதல் சில ஓவர்களை எதிர்கொள்ள தடுமாறினர்.

ஏமாற்றிய ரோகித்

ஏமாற்றிய ரோகித்

டஸ்கின் அகமது பந்துவீச்சை எதிர்கொண்ட ராகுலால் முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. சோரிஃபுல் இஸ்லாம் வீசிய 2வது ஓவரில் ராகுல் ஒரு சிக்சரை விளாசினார். இதனையடுத்து டஸ்கின் அகமது வீசிய அவரது 2வது ஓவரில் ரோகித் சர்மாவை கொடுத்த கேட்ச் வாய்ப்பை வங்கதேச வீரர் ஹசன் கோட்டை விட்டார். எனினும் ரோகித் சர்மா அடுத்த ஓவரிலேயே கேட்ச் மிஸ் செய்த ஹசன் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

கேஎல் ராகுல் அரைசதம்

கேஎல் ராகுல் அரைசதம்

இதனிடையே கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தொடங்கினார். 9வது ஓவரில் மட்டும் இந்திய அணி 24 ரன்களை விளாசியது. இதன் மூலம் கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் கடந்தார். இதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். எனினும் அடுத்த பந்திலேயே ராகுல் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 16 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.. இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 5 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி அடித்த நிலையில், 5 பந்தில் 7 ரன்களில் ரன் அட்டாகி பெவிலியன் திரும்பினார்.

விராட் கோலி அரைசதம்

விராட் கோலி அரைசதம்

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், விராட் கோலி 37 பந்தில் அரைசதம் கடந்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ரன் அடித்த ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடத்தை பிடித்தார். கோலி, இறுதியில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 44 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். அஸ்வின் தன் பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

Story first published: Wednesday, November 2, 2022, 15:44 [IST]
Other articles published on Nov 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+