Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார்?

மும்பை : ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் ஒரு வீரர் எவ்வளவு ரன்கள் அதிகமாக அடித்திருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அதனை எந்த வேகத்தில் அடித்தீர்கள் என்பதைத்தான் தற்போது ரசிகர்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக t20 போட்டிகளில் அரை சதம், சதம் அடிப்பதை விட எவ்வளவு குறைவான பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்தான் தற்போது போட்டியின் மகிமையே இருக்கிறது.

T20 world cup virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20

இதனால் விராட் கோலி போன்ற வீரர்களே ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்து அதிக ரன்கள் அடித்ததற்காக விமர்சிக்கப்படும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், இவர் 799 ரன்கள் அடித்திருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் 144 என்று அளவில் இருக்கிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 143 என்று அளவில் இருக்கிறது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 965 ரன்கள் அடித்து ஸ்ட்ரைக் ரேட் 142 என்று அளவில் வைத்திருக்கிறார். இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இலங்கை அணையின் ஜெயவர்த்தனே இருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 134 என்ற அளவில் இருக்கிறது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 133 அளவில் உள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் விராட் கோலி 1141 ரன்கள் அடித்திருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 131 என்று அளவில் உள்ளது.இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 963 ரன்கள் அடித்திருக்கிறார்.

இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 127 என்று அளவில் உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட் கோலி,ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தங்களுடைய ரன் அடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 30, 2024, 9:40 [IST]
Other articles published on May 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+