For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜெய்ஷா கொடுத்த சத்தியம்! முறியடிக்க நினைக்கும் பாகிஸ்தான்..டி20 உலககோப்பைக்கு பரிசுத் தொகை அறிவிப்பு

லாகூர் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி கடைசியாக 2007 ஆம் ஆண்டு தான் டி20 உலக கோப்பையை வென்றது. 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றது கிடையாது. இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ரசிகர்களிடம் பேசும் போது வரும் டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும்.

ICC T20 World cup - PCB chairman vows Prize money for Pakistan cricketers if they lift world cup

இது தான் ரசிகர்களுக்கு கொடுக்கும் சத்தியம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியா போல் பாகிஸ்தானும் டி20 உலக கோப்பை வெல்ல கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த அணி கடைசியாக 2009 டி20 உலக கோப்பையில் வென்றது. அதன் பிறகு அவர்களும் இறுதிப் போட்டிக்கு சென்றாலும் கோப்பையை வெல்ல முடியாமல் தத்தளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் இம்முறை t20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் தகுதி பிரச்சனை இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு பிட்னஸ் கிடையாது என்று பல மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் உலா வரும். பிட்னஸ் சரியாக இருந்தால் மட்டுமே தற்போது சர்வதேச கிரிக்கெட்டின் சாதிக்க முடியும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு ராணுவ வீரர்களுடன் கிரிக்கெட் வீரர்களை இணைந்து பயிற்சி செய்ய ஏற்பாடு செய்தது.

இதன் மூலம் ராணுவ வீரர்கள் ஏற்பாடு செய்த கேம்பில் பாகிஸ்தான் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று உடல் தகுதியை மேற்கொண்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் கடும் பயிற்சி எடுத்து வந்துள்ளனர். இன்னும் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படவில்லை. ஆனால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களை டி20 உலக கோப்பைக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வரையும் முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊக்கத்துடன் விளையாடுவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி உலக கோப்பையை வெல்லும் பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு தலா இந்திய ரூபாய் மதிப்பில் 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வெல்ல பாகிஸ்தான் எந்த அளவு தீவிரம் காட்டி வருகிறது என்று காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவும், பாகிஸ்தானும் வரும் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் லீக் சுற்றில் மோதுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 6, 2024, 18:06 [IST]
Other articles published on May 6, 2024
English summary
ICC T20 World cup - PCB chairman vows Prize money for Pakistan cricketers if they lift world cup ஜெய்ஷா கொடுத்த சத்தியம்! முறியடிக்க நினைக்கும் பாகிஸ்தான்..டி20 உலககோப்பைக்கு பரிசுத் தொகை அறிவிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+