Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - ரோகித் சர்மாவின் புதிய சாதனை.. யுவராஜின் சாதனை முறியடிப்பு.. 3 முறை கிடைத்த லக்

சிட்னி : 2022 டி20 உலககோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதே ஆடுகளத்தில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகள் 40 ஓவர் விளையாடியதால், பிட்ச் தொய்வாக காணப்படுகிறது.

இதனால் பேட்டிங் கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. எனினும் முதலில் செட்டாகி பிறகு Back foot இல் நின்று விளையாடியதால் ரன்கள் கிடைத்தது.

முதலில் தடுமாற்றம்

முதலில் தடுமாற்றம்

கேஎல் ராகுல் வழக்கம் போல் 12 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் அவர் ரிவ்யூ செய்து இருந்தால் கூட தப்பித்து இருக்கலாம். ஆனால் ராகுல் மேதாவித்தனமாக ரிவ்யூ செய்யாமல் பெவிலியனுக்கு சென்றார். ரோகித் சர்மா தடுமாறினாலும் பிறகு அதிரடியை காட்டினார்.

2 முறை கேட்ச்

2 முறை கேட்ச்

ரோகித் சர்மாவும் இரண்டு முறை தூக்கி அடித்தும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர்கள் வீணடித்தனர். இதனால் இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பிய ரோகித் சர்மா, தனது வழக்கமான அதிரடியை காட்டினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.

சிக்சர் சாதனை

சிக்சர் சாதனை

39 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது ரோகித் சர்மா 34 சிக்சரை அடித்திருக்கிறார்.

ரோகித்துக்கு வாய்ப்பு

ரோகித்துக்கு வாய்ப்பு

ஒட்டு மொத்தமாக முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார். அவர் 63 சிக்சர் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ரோகித் அதிரடியை காட்டி சிறப்பாக விளையாடினால் 50 சிக்சர்களை அடிக்க வாய்ப்புள்ளது. இந்த இன்னிங்சின் போது ரோகித்தின் 2 கேட்சை நெதர்லாந்து வீரர்கள் தவறவிட, நடுவர் ஒரு முறை தவறாக அவுட் வழங்க, அதனை டிஆர்எஸ் மூலம் ரோகித் மாற்றினார்.

Story first published: Thursday, October 27, 2022, 14:32 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+