Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி சவாலாக இருக்கும்.. நன்றாக விளையாடினால் தான் வெற்றி.. ரோகித் பேச்சு

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நான்காவது முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரை இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளன. ஜிம்பாப்வே வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி தங்களது குரூப்பில் 8 புள்ளிகள் உடன் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அரையிறுதி குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதை தற்போது காணலாம்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

ஜிம்பாவேக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.பேட்டிங் , பந்துவீச்சு ஃபில்டிங் என அனைத்திலும் எங்களுடைய செயல்பாடு நன்றாக இருந்தது. இதை தான் நாங்கள் முன்பிலிருந்து எதிர்பார்த்தோம். நாங்கள் இந்த போட்டிக்கு முன்பே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டோம் என்பதை அறிந்தோம். இருப்பினும் இந்த போட்டியை முக்கிய ஆட்டம் போல் எதிர்கொண்டு விளையாடினோம்.

அழுத்தம் குறைகிறது

அழுத்தம் குறைகிறது

சூரியகுமார் யாதவ்வின் செயல்பாடு பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. அவருடைய ஆட்டம் மற்ற பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. இது மிகவும் முக்கியம். ஏனென்றால் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க சில நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். சூரியகுமார் உறுதியுடன் களத்தில் நின்று விளையாடும் போது வீரர்கள் உடைமாற்றும் அறையில் நாங்கள் இருக்கும் போது அழுத்தமில்லாமல் இருப்போம். சூரிய குமாரின் ஆட்டம் பலத்திலிருந்து மேலும் பலமாக மெருகேறி வருகிறது.

அரையிறுதி மீது கவனம்

அரையிறுதி மீது கவனம்

தற்போது எங்களுடைய கவனம் எல்லாம் அரையிறுதி போட்டி மீது உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவாலாக இருக்கும். அடிலெய்ட்டில் அந்தப் போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே நாங்கள் அங்கு விளையாடி இருப்பதால் களத்தின் சூழல் எங்களுக்கு தெரியும். இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி நிச்சயம் சிறப்பானதாக அமையும்.

எப்போது அரையிறுதி?

எப்போது அரையிறுதி?

அரை இறுதிக்கு சென்று விட்டோம் என்று தெரிந்தும் எங்களுக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் போட்டியை நேரில் வந்து பார்த்தது ஆச்சரியம் அளிக்கிறது. அரையிறுதியிலும் இதே போன்ற ஆதரவை ரசிகர்கள் எங்களுக்கு கொடுப்பார்கள் என நம்புகிறேன். அணியின் சார்பாக அனைவருக்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது.

Story first published: Sunday, November 6, 2022, 18:23 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+