Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்.. தனி நபர் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம்!

நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்து இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதற்காக தனி மைதானம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

T20 world cup ind vs pak virat kohli suryakumar kuldeep yadav bumrah rohit sharma hardik pandya bcci india national cricket team 20

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. அவ்வளவு ஸ்பெசல் ஏற்பாடுகள் இந்த போட்டிக்கு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று அச்சுறுத்தல் வெளியாகி உள்ளது.

மேலும் இது கூட்டமாக இல்லாமல் தனி நபர் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் பொதுவாக தனிநபர் கூட்டமாக இருக்கும் பகுதியில் சென்று கத்தியால் குத்தி கொலை செய்வார். அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று போலீசார் கைது செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் தான் இம்முறை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது வீரர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ சி சி, இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அல்லாமல் நியூயார்கில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்குமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

கூடுதலாக 100 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு ரசிகர்களையும் சோதித்த பிறகு மைதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. மைதானத்தை மட்டுமல்லாமல் மைதானத்தை சுற்றியும், வாகனங்கள் நிறுத்தும் இடம் என ஒவ்வொரு பகுதிக்கும் தனி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இந்த போட்டியை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடத்த அமெரிக்க அதிகாரிகள் உறுதி அளித்து இருப்பதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, May 30, 2024, 9:27 [IST]
Other articles published on May 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+