Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 தரவரிசை: கோஹ்லிக்கு தொடர்ந்து முதலிடம்.. சாஹல் முன்னேற்றம்

மும்பை: ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா வென்றபோதிலும், கோஹ்லியால் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை. இருப்பினும் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில், கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் 2ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் உள்ளார். கோஹ்லி இவரைவிட 28 ரேங்கிங் புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார்.

 டெஸ்டில் கோஹ்லிக்கு 2வது இடம்

டெஸ்டில் கோஹ்லிக்கு 2வது இடம்

ஆஸ்திரேலியாவின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான கிளன் மேக்ஸ்வெல் 3ஆவது இடத்தில் உள்ளார். கோஹ்லி, டெஸ்ட் தரவரிசையில் 2ஆவது இடத்திலும், ஒரு நாள் போட்டி தரவரிசையில 3ஆவது இடத்திலும், டி20 தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ராகுல் முன்னேற்றம்

ராகுல் முன்னேற்றம்

டி20 வரிசையில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் இரு இடங்கள் முன்னேறி 5வது இடத்தையும், இந்திய வீரர் கே.எல்.ராகுல் 15 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 பவுலர்கள்

பவுலர்கள்

பவுலர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் முதலிடத்திலும், இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா 2ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரீ 3வது இடத்திலும் உள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், 92 இடங்கள் முன்னேறி 86வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டத்தில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியாவுக்கு 2வது இடம்

அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் நியூஸிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஓரு இடம் முன்னேறி, 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Friday, February 3, 2017, 11:01 [IST]
Other articles published on Feb 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+