Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் -இந்தியாவுக்கு திடீரென்று வந்த சிக்கல்..5 அணிகள் கடும் போட்டி.. முழு விவரம்

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்வி தற்போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.புள்ளி பட்டியலில் டாப் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்லும்.முதல் சீசனைப் போல் இந்தியா இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்போது தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து இந்தியாவின் சவால் மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது எந்த அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றதால் 75.5% புள்ளிகளுடன் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இது கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை உறுதியாகி உள்ளது. எனினும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கு தோல்வியை தழுவினாலோ, அதே சமயம் இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றாலோ ஆஸ்திரேலியா வெளியேறிவிடும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இந்தியா

இந்தியா

தற்போது இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுடன் வரும் பிப்ரவரி மாதம் மோதுகிறது. இதில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று அல்லது மூன்றுக்கு 0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்ல முடியும். ஒருவேளை இரண்டுக்கு பூஜ்ஜியம் அல்லது இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்தியா வென்றால் இலங்கை அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவினால் மட்டுமே இந்திய அணி இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும். இதனால் மற்ற அணிகளை நம்பாமல் இருக்க வேண்டுமென்றால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும்.

தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணி

இதேபோன்று தென்னாப்பிரிக்க அணிக்கும் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி தற்போது 48.72 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மார்ச் மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றினால் 55.6 சதவீதத்திற்கு உயர்வார்கள். அதேசமயம் இந்திய அணி ஆஸ்திரேலிய க்கு எதிராக தொடரை இழக்க வேண்டும். இதேபோன்று இலங்கை அணி நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவ வேண்டும். இது நடந்தால் தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.

இலங்கை

இலங்கை

இலங்கை அணியை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாகவும் அல்லது ஒரு போட்டி ஏதாவது வெற்றி பெற வேண்டும். அப்படி செய்து இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மூன்றுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவ வேண்டும். அதேபோன்று தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வியை தழுவ வேண்டும்.

 இங்கிலாந்து

இங்கிலாந்து

அப்படி நடந்தால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். இதேபோன்று தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்துக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் எஞ்சிய அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவினால் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Story first published: Sunday, January 8, 2023, 20:52 [IST]
Other articles published on Jan 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+