ஐசிசி தரவரிசை பட்டியல்.. முதல் 10 இடத்தில் 7 இந்திய வீரர்கள்.. மூன்று பிரிவிலும் இந்தியா ஆதிக்கம்
மும்பை : ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்திய அணி வீரர்கள் முதல் 10 இடங்களில் ஏழு பேர் இடம்பெற்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி எப்போதுமே சிறப்பாக தான் விளையாடி வருகிறது. கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலிலும் இந்திய அணி இறுதிப் போட்டி வரை வந்ததே இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து நம்பர் 1 இடம் பிடித்திருக்கிறது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிராக சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் டெஸ்டில் 12 விக்கெட் வீழ்த்தியதை அடுத்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவருக்கும் இரண்டாம் இடத்தில் உள்ள பாட் கம்மின்ஸ்க்கும் 56 புள்ளிகள் இடைவெளிகள் இருக்கின்றன. இதேபோன்று வேக பந்துவீச்சாளர் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையிலும் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறார்.
இதேபோன்று மற்றொரு சுழற் பந்துவீச்சாளருமான ஜடேஜா பத்தாவது இடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் வரிசையில் ஜடேஜா முதலிடத்திலும் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் அக்சர் பட்டேல் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
இதன் மூலம் பேட்டிங், பந்து வீச்சு, ஆல்ரவுண்டர் என்று மூன்று பிரிவிலும் இந்திய அணி முதல் 10 இடத்துக்குள் ஏழு வீரர்கள் இடம் பெற்று அசத்திருக்கிறார்கள்.
இதனிடையே அறிமுக டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் விளாசி அசத்திய 21 வயதான ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் அறிமுக இடத்திலேயே 73 வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் 76 ரன்கள் விளாசிய விராட் கோலி 14 ஆம் இடத்தில் இருக்கிறார். இதைப்போல் பண்ட் தற்போது 11 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications