For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. நம்பர் 1ல் பும்ரா.. சரிந்த அஸ்வின்.. கம்பேக் கொடுத்த ஜெய்ஸ்வால், விராட் கோலி!

மும்பை: ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரிட் பும்ரா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் சக இந்திய வீரரான அஸ்வின் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி உள்ளிட்டோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு நம்பிக்கையுடன் வந்த வங்கதேசம் அணியை வெறும் 6 செஷனில் வீழ்த்தி இந்திய அணி தரமான சம்பவத்தை செய்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

ind vs ban jasprit bumrah virat kohli


இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட பலரும் சிறப்பாக விளையாடினர். இந்த நிலையில் ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தக்க வைத்து கொண்டுள்ளார்.

அதேபோல் 2வது இடத்தைல் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் தக்க வைத்துள்ளார். ஆனால் வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது போட்டியில் 2 அரைசதங்கள் விளாசிய ஜெய்ஸ்வால், 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

அவர் 2வது டெஸ்ட் போட்டியில் 47 மற்றும் 29* என்று ரன்கள் சேர்த்ததால், மீண்டும் டாப் 10க்குள் வந்துள்ளார். 12வது இடத்தில் இருந்த விராட் கோலி மொத்தமாக 6 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 3 இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல் 10வது இடத்தில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, 5 இடங்கள் தள்ளப்பட்டு, 15வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் இலங்கை அணியின் வளரும் நட்சத்திரமான கமிண்டு மெண்டிஸ் 11வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பவுலர்களை தரவரிசையை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் நம்பர் 1 இடத்தில் இருந்து சரிவை சந்தித்துள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் 870 புள்ளிகளுடன் பும்ரா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் 1 புள்ளிகள் வித்தியாசத்தில் 869 புள்ளிகளுடன் அஸ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளார். இதனல் இந்திய வீரர்கள் ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Wednesday, October 2, 2024, 14:56 [IST]
Other articles published on Oct 2, 2024
English summary
ICC Test Rankings: Jasprit Bumrah becomes No 1 bowler in ICC Test Rankings and Jaiswal in No.3 batsmen, Virat Kohli back in top 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+