Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை - ரிஷப் பண்ட் கிடுகிடு உயர்வு.. ரோகித் சரிவு.. கில், ஜடேஜா முன்னேற்றம்

மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக தோல்வியை தழுவியது. இதில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் தவிர மற்ற யாரும் 200 ரன்களை கூட இந்த தொடரில் தொடவில்லை.

இந்த நிலையில் மும்பை டெஸ்ட் பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய பண்ட் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டு இருக்கிறார்.

icc rankings rishabh pant rohit sharma virat kohli

ரிஷப் பண்ட் 11வது இடத்தில் இருந்து தற்போது ஆறு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தை பிடித்தது அவருடைய சிறந்த செயல்பாடு ஆகும். தற்போது கார் விபத்திற்கு பிறகு மீண்டு வந்திருக்கும் பண்ட், தற்போது ஆறாவது இடம் வரை முன்னேறி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அபாரமாக விளையாடினால் டாப் 3 இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றது. ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும்,ஹாரி புரூக் மூன்றாவது இடத்திலும் , இந்திய வீரர் ஜெய்ஸ்வால் நான்காவது இடத்திலும், ஸ்மித் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இதைப் போன்று நியூசிலாந்து வீரர் டாரல் மிட்செல் ஏழாம் இடத்தை பிடித்திருக்கின்றார். இதேபோன்று மும்பை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 90 ரன்கள் எடுத்த சகில் நான்கு இடங்கள் முன்னேறி தற்போது பதினாறாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

இதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இதேபோன்று மற்றொரு இந்திய வீரரான வாஷிங்டன் சுந்தர் 7 இடங்கள் முன்னேறி தற்போது 46வது இடத்தை பிடித்திருக்கிறார்.நியூசிலாந்து வீரர் ஏஜாஸ் பட்டேல் 12 இடங்கள் முன்னேறி ,22 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

Story first published: Wednesday, November 6, 2024, 17:51 [IST]
Other articles published on Nov 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+