Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை பட்டியல்.. 10 வருடத்தில் முதல்முறை.. 22வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி!

மும்பை: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டுக்கு பின் டாப் 20 இடங்களில் இருந்து விராட் கோலி வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறை என்பதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கொஞ்சம் கூட பொறுப்புடன் விளையாடாததே காரணமாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் இருவரையும் ஓய்வு பெற வலியுறுத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

ind vs nz virat kohli rohit sharma

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி வெறும் ஒரேயொரு அரைசதம் உட்பட 93 ரன்களை மட்டுமே சேர்த்தார். இடதுகை ஸ்பின்னர்கள் பவுலிங் செய்தாலே விராட் கோலி அச்சம் கொண்டது வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் விராட் கோலி மோசமான ஃபார்மில் இருப்பது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

14வது இடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது 8 இடங்கள் பின் தங்கி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி ஒருமுறை கூட டாப் 20 இடங்களில் இருந்து பின் தங்கியதே கிடையாது. ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக 20 இடங்களுக்கும் கீழ் ஐசிசி தரவரிசையில் தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி, தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அடுத்ததாக விளையாடவுள்ள ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் விராட் கோலி அக்னி பரீட்சையாக அமையலாம் என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியா மண்ணிலும் சொதப்பினால், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஐசிசி தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்து சீனியர் வீரர் கேன் வில்லியம்சன் 2வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் 3வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் 4வது இடத்தில் ஜெய்ஸ்வால், 5வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா அணியின் பாபர் அசாம் கூட 17வது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 6, 2024, 15:02 [IST]
Other articles published on Nov 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+