Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. புதிய உயரத்தை தொட்டார் கிங்.. சச்சின் தொடங்கி பலபேர் சாதனையை ஒரே நாளில் முறியடித்த கோலி!

Recommended Video

புதிய உயரத்தை தொட்டார் கோலி... சச்சின் சாதனை முறியடிப்பு

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி புதிய சாதனையை படைத்து இருக்கிறார்.

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டி தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது. உலகக் கோப்பையில் நடக்கும் மிக முக்கியமான லீக் ஆட்டங்களில் ஒன்றாகும் இது.

இதில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் பிட்ச்.

ஸ்கோர் என்ன

ஸ்கோர் என்ன

இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது. ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். அதே போல் கே எல் ராகுல் 48 ரன்கள் இருக்கும் நேரத்தில் அவுட்டானார். விஜய் சங்கரும் 14 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் தற்போது கோலி மட்டும் நிதானமாக ஆடி வருகிறார்.

கோலி

கோலி

கோலி இந்த போட்டியில் 37 ரன்கள் இருக்கும் போது புதிய சாதனை படைத்தார். 37 ரன்கள் இருக்கும் போது சரியாக 20000 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஐசிசி போட்டிகளில் 20000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். உலகில் சில ஜாம்பவான் வீரர்கள் மட்டுமே 20000 ரன்களை எடுத்துள்ளனர்.

என்ன சாதனை

என்ன சாதனை

மொத்தம் 417 போட்டிகளில் விராட் கோலி இந்த சாதனை நிகழ்த்தி இருக்கிறார். டெண்டுல்கர் 453 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார். லாராவும் இதே 453 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார். பாண்டிங் 464 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார்.

டி வில்லியர்ஸ் சாதனை

டி வில்லியர்ஸ் சாதனை

டி வில்லியர்ஸ் 483 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார். ஜேக்கப் காலிஸ் 491 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார். ராகுல் டிராவிட் 492 போட்டிகளில் இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 28, 2019, 10:21 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+