Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாட்ட்ட்... கோபத்தில் கத்திய ரோஹித் மனைவி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. சர்ச்சை மேல் சர்ச்சை!

Recommended Video

WORLD CUP 2019: IND VS WI | மே. இந்திய தீவுகளுக்கு எதிராக பேட்டிங் இறங்கும் இந்தியா- வீடியோ

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு விக்கெட் கொடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பையில் இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் தற்போது லீக் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் ரோஹித் சர்மா அவுட்டான விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் ரோச் போட்ட ஓவரின் கடைசி பந்தை ரோஹித் எதிர்கொண்டார். அப்போது ரோச் போட்ட பந்து ரோஹித்தின் காலுக்கும் பேட்டிற்கும் இடையில் சென்றது. இதற்கு ரோச் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை.

அவுட் இல்லை

அவுட் இல்லை

இதனால் மேற்கு இந்திய தீவுகள் ரிவ்யூ கேட்டது. பந்து சரியாக பேட்டிற்கும் காலிற்கும் இடையில் சென்றது. பந்து காலில் உரசுவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார். பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறி கோலி ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார். இதுதான் சர்ச்சையாகி உள்ளது.

ரோஹித் மனைவி

ரோஹித் மனைவி

இதை பார்த்துவிட்டு ரோஹித் சர்மாவின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். இது எப்படி விக்கெட் என்பது போல கோபமாக பார்த்தார். அதன்பின் கோபமாக வாட் என்று கத்தினார்.

ரோஹித் என்ன செய்தார்

ரோஹித் என்ன செய்தார்

ஆனால் ரோஹித் இதை பார்த்து அதிர்ச்சி அடையவில்லை. எல்லாம் கடந்த ஞானி போல் ரோஹித் சர்மா சிரித்தார். அதேபோல் பெவிலியனுக்கு செல்லும் போது உணர்ச்சிகளை எல்லாம் திட்டிக்கொண்டே சென்றார். பெவிலியன் செல்லும் வரை அவர் தனக்குள்ளேயே ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

என்ன

மூன்றாவது நடுவர்கள் இப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு விக்கெட் கொடுக்கிறார்கள்.

ஏன் அவசரம்

இந்த கோணத்தில் பார்த்தால் ரோஹித் சர்மா விக்கெட் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு பாத்ரூம் செல்ல வேண்டிய அவசரம் போல என்று இவர் கூறியுள்ளார்.

ரியாக்சன்

ரோஹித் சர்மா மனைவி கோபமாக கொடுத்த ரியாக்சன்.

என்ன அபராதம்

நடுவர்கள் தவறு செய்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் எப்படி மூன்றாவது நடுவர்கள் தவறு செய்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் என்றுள்ளார் இவர்.

தவறு

நடுவர்கள் தவறாக தீர்ப்பு வழங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. ரோஹித் சர்மா அவுட் என்பதற்கான எந்த ஆதாரமும் களத்தில் தெரியவில்லை என்று இவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, June 27, 2019, 16:55 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+