Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பமே வெற்றி வெற்றி.. மே. இந்திய தீவுகளுக்கு எதிராக பேட்டிங் இறங்கும் இந்தியா.. இப்படி ஒரு காரணமா!

Recommended Video

அசத்திய பந்து வீச்சு... மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா

லண்டன்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணியில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

ஆம் இந்திய அணியில் கடந்த போட்டியில் செய்யப்பட்ட சொதப்பலுக்கு பின்பும் கூட எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே பிளேயிங்தான் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள். அதன்படி விஜய் சங்கருக்கு இந்த போட்டியிலும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் பிட்ச் ஆகும். அதிரடியாக பேட்டிங் செய்ய சாதகமான மைதானம் ஆகும் இது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

நல்லது

நல்லது

இதனால் முதலில் களமிறங்கும் அணி 300 ரங்களை எடுக்க முடியும். ஆனால் அதற்கு அடுத்து இறங்கும் அணி இங்கு அவ்வளவு ரன்களை எடுக்க முடியாது. ஏனென்றால் பிட்ச் போக போக போக பவுலிங் செய்ய சாதகமாக முடியும். முதல் இன்னிங்சில் கடைசி 5 ஓவரில் இங்கு ரன் எடுப்பதே கடினமான விஷயம் ஆகும்.

அதிக சாதகம்

அதிக சாதகம்

இங்கு சேஸ் செய்வது ரொம்ப கடினம். இதனால் இந்திய அணிக்கு டாஸ் வென்றது சாதகமான விஷயமாக மாறி உள்ளது. அதேபோல் இந்த மைதானத்தில்தான் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று மழை வேறு இல்லாததால், அதிக ரன்களை இந்தியா குவிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 27, 2019, 15:05 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+