Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பை இந்திய அணியில் ராகுல் ஏன்? சாஹலுக்கு பதில் குல்தீப் , அக்சர் எதற்கு? அகார்கர் விளக்கம்

கேண்டி : உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கும் கே எல் ராகுலுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான சாஹல் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் குல்திப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேலுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் இந்திய அணியில் சில வீரர்களுக்கு உடல் தகுதி பிரச்சனை இருந்தது.

ICC world cup 2023 - Agarkar explains Why KL Rahul and axar patel included in squad

ஆனால் காயத்திலிருந்து மூன்று முக்கிய வீரர்கள் தற்போது முழுமையாக குணமடைந்து இருப்பதால் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அணியின் பலம் அதிகரித்து இருக்கிறது. கே எல் ராகுல் பொருத்தவரை அவர் ஆசிய கோப்பை தொடர்க்கு முன்பு திடீரென லேசான சுளுக்கு அவருக்கு ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

கே எல் ராகுல் இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக திகழ்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்று இருக்கிறார். அவர் விக்கெட் கீப்பிங் தற்போது செய்கிறார். இதனால்தான் கேஎல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது பந்தை உள்ளே எடுத்து வர கூடியவர்கள்.

மேலும் இருவருமே நன்கு பேட்டிங் செய்யும் வீரர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் பேட்டிங் பலம் அதிகரிக்கிறது. மேலும் குல்தீப் பந்தை வீரர்களிடமிருந்து வெளியே கொண்டு செல்லும் வகையில் வீசும் பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 50 ஓவர் கிரிக்கெட்டில் ஆஃப் பின்னர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆனால் அணியின் பேலன்ஸ்க்கு தான் இவ்வாறு தேர்வு செய்திருக்கிறோம். டி20 யை விட ஒருநாள் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் அதிக ஓவர்கள் வீசுகிறார்கள். எங்களிடம் இருக்கும் வீரர்களை வைத்து நாங்கள் அணியை தேர்வு செய்திருக்கிறோம்.இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அஜித் அகார்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 5, 2023, 15:41 [IST]
Other articles published on Sep 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+