For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை தொடர்.. லீக்கான இந்தியாவின் ஸ்பெஷல் ஜெர்சி.. 2 ஸ்டார் இடம்பெற்றதால் குழம்பும் ரசிகர்கள்!

மும்பை: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அணிய உள்ள ஸ்பெஷல் ஜெர்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் லீக்காகியுள்ளது. அந்த ஜெர்சியில் 2 ஸ்டார்கள் மட்டுமே இருப்பதால், ரசிகர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

இந்தியாவில் 4வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தமாக 10 அணிகள், 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள், இறுதிப் போட்டி என்று தொடர் நடக்கவுள்ளது. இதற்காக 10 மைதானங்கள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளன.

ICC World Cup 2023: images of the jerseys for Team India for the World Cup have been leaked

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதன்பின் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனைகள் தொடங்கின. புக் மை ஷோ செயலி மூலமாக தொடங்கப்பட்ட டிக்கெட் விற்பனையில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தும், ரசிகர்கள் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று கூறியது சர்ச்சையாகின.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல், அஸ்வின், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் சேர்க்கப்படவில்லை. உலகக்கோப்பை அணியில் ஒரு தமிழர் கூட இல்லாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சூர்யகுமார் யாதவின் தேர்வும், அக்சர் படேலின் தேர்வும் ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆசியக் கோப்பை முடிவடைந்து இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பியதும் இந்த ஜெர்சி அறிமுக விழா நடக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அணிய உள்ள ஜெர்சி புகைப்படம் லீக்காகியுள்ளது.

இந்திய அணி ஜெர்சியில் வழக்கமாக 3 ஸ்டார்கள் இடம்பெற்றிருக்கும். ஆசியக் கோப்பை ஜெர்சியில் கூட 3 ஸ்டார்களுடன் தான் இந்திய அணி விளையாடி வருகிறது. அது 1983 உலகக்கோப்பை, 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை ஆகிய வெற்றிகளை குறிக்கும். ஆனால் உலகக்கோப்பை ஜெர்சியில் 2 ஸ்டார்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை என்பதால், 1983 மற்றும் 2011 ஆகிய உலகக்கோப்பையை மட்டுமே கணக்கிட்டு 2 ஸ்டார்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, September 15, 2023, 19:16 [IST]
Other articles published on Sep 15, 2023
English summary
World Cup 2023: images of the jerseys for Team India for the World Cup have been leaked. Those Jersey have only 2 stars which refers 1983 and 2011 World Cup win.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+