Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அகமதாபாத் மைதானத்தில் 6 மாதம் முன்பு 2 சம்பவம் செய்த இந்திய வீரர்கள்.. இன்றும் சாதிப்பார்களா?

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு களிக்க உள்ளார்கள்.

இதனிடையே இதே மைதானத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு இரண்டு இந்திய வீரர்கள் செய்த சம்பவம் வரலாற்றில் பொறிக்கப்பட்டவை. அதனை தமிழக ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

ICC World cup final 2023 Ind vs Aus - 2 Indian cricketers returns to the venue where they created record


ஆம் இதே மைதானத்தில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ஐந்தாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் விளையாடிய கில் மற்றும் ஜடேஜா ஆகியோர் இன்று நடைபெறும் உலக கோப்பை பைனலில் விளையாடுகிறார்கள். பிளே ஆப் சுற்றில் கில் விளையாடும் போதெல்லாம் மகத்தான இன்னிங்சை விளையாடினார்.

மேலும் தொடக்க வீரராக 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதேபோன்று ஒரு ஆட்டத்தை இன்று கில் வெளிப்படுத்தினால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். ஆனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஹீரோவே ஜடேஜா தான். கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவை என இருந்தபோது ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரி என அடித்து சிஎஸ்கே அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்தார்.

அதே மைதானத்திற்கு தற்போது ஜடேஜா திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் ஒரு ஆட்டத்தை பந்துவீச்சு அல்லது பேட்டிங்கில் ஜடேஜா வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்கு ஹீரோவாக ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோன்று அகமதாபாத் ஆடுகளம் இந்திய வீரர்களுக்கு மிகவும் சாதகமாகவே இருந்திருக்கிறது. இதே ஆடுகளத்தில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, November 19, 2023, 11:30 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+