Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு.. 90ஸ் கிட்ஸ்கள் கனவு நிறைவேறுமா?ஆஸி தோற்குமா

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மீண்டும் பல பரிட்சை நடத்துகிறது. இந்தத் தொடரில் தோல்வியே தழுவாத இந்திய அணி நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றனர்.

ICC World cup Final 2023 - will india take revenge against australia for 2003 WC Loss

இந்த போட்டியை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் இருந்து பார்க்க இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இது 90ஸ் கிட்ஸ் களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மீண்டும் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் தடுமாறுகிறார்கள். இதனால் இந்திய அணி தங்களுடைய சுழற் பந்துவீச்சை பலப்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் நல்ல பார்மில் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இரண்டிலும் நல்ல பார்மில் இருந்தாலும், சில நேரத்தில் தடுமாறுகிறது. ஆஸ்திரேலிய அணி முன்பு போல் வலிமைமிக்க அசுரத்தனமான அணியாக இல்லை என்றாலும் இன்றும் அவர்கள் ஒரு சாம்பியன் அணியாக தான் வலம் வருகிறார்கள். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது எளிதல்ல.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தோல்விக்கு பழித்தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பை இயற்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதனை இந்தியா பயன்படுத்துமா என்பதே 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதனால் ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Story first published: Friday, November 17, 2023, 0:10 [IST]
Other articles published on Nov 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+