கோலியோ, ஷமியோ இல்லை.. உலக கோப்பையில் இவர் தான் இந்தியாவின் சிறந்த வீரர்.. தினேஷ் கார்த்திக் கருத்து
மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சிறந்த வீரர் யார் என்பது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நச்சென்று ஒரு பதிலை அளித்துள்ளார். பொதுவாக ரசிகர்கள் யார் அதிக ரன்கள் எடுக்கிறார்கள். யார் அதிக விக்கெட் எடுக்கிறார்கள்? யார சதம் அடிக்கிறார்கள் என்ற நம்பர்கள் பின்னாடி தான் செல்கிறார்கள். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் யார் சுயநலம் இன்றி அணிக்காக விளையாடுகிறார் என்பது தான்.

ஆனால் இது குறித்து யாரும் யோசிப்பதில்லை. இதற்கு சான்றாக நடப்பு உலக கோப்பை தொடரில் நடந்த பல சம்பவங்களை கூறலாம். இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் சிறப்புமிக்க வீரர் யார் என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தன்னுடைய தேர்வு எப்போதுமே ரோகித் சர்மா தான் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளித்திருக்கிறார். மற்ற வீரர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தன்னுடைய ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா ஒரு வழியை அமைத்து கொடுத்துவிட்டார். அதேபோன்று ஒரு கேப்டனாகவும் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் ரோகித் சர்மாவை தான் தேர்வு செய்வேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
நடப்பு உலக கோப்பை தொடரின் 10 இன்னிங்ஸில் விளையாடிய ரோகித் சர்மா 550 ரன்கள் அடித்திருக்கிறார். இது சராசரி 55 ரன்கள் ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 124 என்ற அளவில் வைத்திருக்கிறார். ரோகித் சர்மா இந்த தொடரில் 28 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
குறிப்பாக மும்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா 29 பந்துகளில் அடித்த 47 ரன்கள் தான் இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது.மேலும் இந்த ஆடுகளத்தில் இப்படித்தான் விளையாட வேண்டும் என மற்ற வீரர்களுக்கும் ரோகித் சர்மா பாடம் எடுத்து விட்டார். இது போன்று ரோகித் சர்மா பல தன்னலம் இன்றி இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications