புனே : உலகக் கோப்பையில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளப் போகிறது என்றாலே சில தயக்கம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படும். ஏனென்றால் யாராலும் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது வங்கதேசம் இந்தியாவுக்கு என்ன செய்தது என்பதை மறந்து விட முடியாது.
தற்போது கூட வங்கதேசம் மண்ணில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவியது. இதனால் வங்கதேசத்தை நாளை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று விராட் கோலி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் உலககோப்பை வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அவர் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 241 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் ஒரு சதமும் அடங்கும். வங்கதேசத்துக்கு எதிராக உலக கோப்பையில் ரோகித் சராசரி 120 என்ற அளவில் இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக். இவர் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 177 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதமும் அடங்கும்.சேவாக்கின் சராசரி 88 என்ற அளவில் இருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் நட்சத்திர விராட் கோலி. இவர் வங்கதேசத்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடி 129 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். கோலியின் சராசரி 64.5 என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் கே எல் ராகுல்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடி 77 ரன்கள் அடித்தார். இதில் ஆறு பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் முன்னாள் கேப்டன் கங்குலி. இவர் வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் உலக கோப்பையில் விளையாடி 66 ரன்கள் சேர்த்தார் இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.