Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final - ஆஸியை முதல் இன்னிங்சில் எந்த ஸ்கோரில் சுருட்டினால் வெற்றி கிடைக்கும்.. ஒரு பார்வை

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்து வீசி வருகிறது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டு ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தாலும், அதன் பிறகு அபாரமாக விளையாடி வருகிறார்கள்.

76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி சரிவை சந்தித்தபோது டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு வருகின்றனர்.

ICC WTC Final 2023 - What is the Good score for India to restrict australia in first innings

58 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. எனினும் ஆடுகளம் சூழல் கருத்தை கொண்டு முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை எந்த ஸ்கோரை சுருட்டினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆடுகளம் நினைத்தது போல் பெரிய அளவில் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. எனினும் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது புதிய பந்தை சிறப்பாக எதிர்கொண்டால் பெரிய இலக்கை எட்ட முடியும். ஆனால் புதிய பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை முதலில் 350 ரன்களுக்குள் சுருட்ட வேண்டியது அவசியம். ஆனால் முதல் நாள் முடிவிலே ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் அடித்துவிட்டதால், அவர்கள் சுலபமாக 450 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள்.இதனால் இந்தியா 400 ரன்களில் சுருட்ட வேண்டும் என்ற இலக்கில் இருப்பது நல்லது.

அதற்கு மேல் சென்றால் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருக்கும். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 350 ரன்களில் சுருட்டும் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்யும்போது அந்த இலக்கை தாண்ட வேண்டும். தற்போது மெல்ல மெல்ல போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கம் சாய்ந்து வருகிறது.

இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே மீண்டும் போட்டிக்குள் இந்திய வீரர்களால் வர முடியும்.டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதன் சிறப்பம்சமே கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டம் மாறிவிடும். இதனால் விக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, June 7, 2023, 20:44 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+