Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC WTC Final 2023 - இந்திய டெஸ்ட் அணியில் 3வது வேகப்பந்துவீச்சாளர் யார்? 3 பேர் இடையே கடும் போட்டி

மும்பை : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. வரும் ஏழாம் தேதி இந்த போட்டி தொடங்கும் நிலையில் இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பிளேயிங் லெவன் குறித்து இறுதி முடிவு எடுக்க ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிட்டும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் தங்களுடைய இடத்தை உறுதி செய்து கொள்வார்கள்.

தொடக்க வீரராக சுப்மன் கில், ரோகித் சர்மா, மூன்றாவது வீரராக புஜாரா, நான்காவது வீரராக கோலி, ஐந்தாவது வீரராக ரகானே, ஆறாவது வீரராக கே எஸ் பரத் அல்லது இஷான் கிஷன் ஆகியோர் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தால் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

ICC WTC Final 2023 - Who will be the third fast bowler for team india

இந்த நிலையில் மூன்று வேகப்பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து முடிவு எடுக்க ராகுல் டிராவிட் யோசித்து வருகிறார். குறிப்பாக முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் நல்ல பார்மில் இருந்து வருகிறார்கள். இதனால் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து சூழலில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் உமேஷ் யாதவ். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் உமேஷ் யாதவ், பந்துகளை நன்றாக ஸ்விங் செய்வார். இதனால் உமேஷ் யாதவ் பெயர்தான் முதலில் இருக்கிறது. அதேசமயம் வெளிநாட்டு ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழக்க கூடும். இதனால் பேட்டிங் தெரிந்த ஒரு ஆல் ரவுண்டர் அணியில் இருப்பது கூடுதல் பலத்தை தரும்.

இதன் காரணமாக ஷர்துல் தாக்கூரை பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. ஆனால் ஷர்துல் தாக்கூர் கடந்த சில காலமாக பேட்டிங்கில் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்துவதில்லை. பெரிய தாக்கத்தை அவர் ஐபிஎல் தொடரில் கூட ஏற்படுத்தவில்லை. இது அவருக்கு மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது வீரராக இடது கை வேகப்பந்துவீச்சாளர் உணாட்கட் பெயரும் பரிசினை செய்யப்படுகிறது.

உனாட்கட் இடது கை வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் இடதுகை வேக பந்துவீச்சாளரின் செயல்பாடு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த மூன்று வீரர்களில் யாரை அணியில் சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது.

Story first published: Friday, June 2, 2023, 15:28 [IST]
Other articles published on Jun 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+