இன்னும் 280 ரன்கள்.. கைவசம் 7 விக்கெட்.. பரபரப்பான நிலையில் WTC Final.. சாதிக்குமா இந்தியா
லண்டன் : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தற்போது கிளைமாக்ஸ் நோக்கி வந்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் அடிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனால் 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தில் விளையாடி வந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடக்க வீரர்கள் கில் சர்ச்சையான முறையில் 18 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 60 பந்துகளில் 43 எடுத்திருந்தபோது அவுட் ஆனார்.

இதில் 7 பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும். பொறுமையாக விளையாடிய புஜாரா ஐந்து பவுண்டரிகள் அடித்து 47 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் அடுத்து 93 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது விராட் கோலியும் ரகானேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
44 ரன்கள் உடன் விராட் கோலியும், 20 ரன்கள் உடன் ரஹானேவும் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு இன்னும் ஏழு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. கைவசம் 90 ஓவர்கள் இருக்கிறது.இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு மிகவும் குறைவு என கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மழையால் ஒரு மணி நேரம் வரை ஆட்டம் பாதிக்கப்பட்டால் மட்டுமே ரிசர்வ் டேவை பயன்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் இந்திய நேரப்படி ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் இரவு பத்து முப்பது மணி வரை நடைபெறும். அது வரை இந்திய அணி விக்கெட்டுகள் விழாமல் இருந்தால் ஆட்டம் டிராவில் முடிவடையும். இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளப்படும். ஒருவேலை இந்திய அணி வெற்றி இலக்கை எட்டினால் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்று விடும்.


Click it and Unblock the Notifications