Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2, 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அணிக்கு பாரமாகி விடுவோம் - கிறிஸ் கெய்ல்

கேப் டவுன் : ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக விளையாட தவறினால் அதன்பின்பு நாம் விளையாடும் அணிக்கு நாம் பாரமாகிவிடுவோம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் அணி சார்பில் விளையாடிய கிறிஸ் கெய்ல், போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் சக வீரர்கள் மட்டுமின்றி, அணியின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களிடமும் மரியாதை கிடைக்காது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மெசான்ஸி சூப்பர் லீக்கில் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்காக களமிறங்கி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கிறிஸ் கெய்ல், மொத்தமாக 101 ரன்களே எடுத்திருந்தார். இந்நிலையில் தொடர் முடிவடைவதற்கு முன்பாகவே அவர் போட்டிகளில் ஆடுவதில் இருந்து விலகியுள்ளார்.

 மெசான்ஸி சூப்பர் லீக் தொடர்

மெசான்ஸி சூப்பர் லீக் தொடர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல், தென்னாப்பிரிக்காகவில் நடைபெற்றுவரும் மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடினார்.

 5 போட்டிகளில் 47 ரன்கள்

5 போட்டிகளில் 47 ரன்கள்

நவம்பர் 8 முதல் டிசம்பர் 16ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல், முதல் 5 போட்டிகளில் மொத்தமாக 47 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் 6வது போட்டியில் 28 பந்துகளில் 54 ரன்கள் அடித்து தன்னுடைய ஆட்டத்தை சமன் செய்தார். இந்த போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் ஜோஸி ஸ்டார்ஸ் தோல்வியடைந்துள்ளது.

 கிறிஸ் கெய்ல் வருத்தம்

கிறிஸ் கெய்ல் வருத்தம்

மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் ஜோஸி ஸ்டார்ஸ் அணிக்காக கடந்த ஆண்டும் களமிறங்கி ஆடிய கிறிஸ் கெய்ல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2, 3 போட்டிகளில் சரியாக விளையாட வில்லை என்றால் நமக்கு அணியில், சக வீரர்கள் மத்தியில் மரியாதை கிடைக்காது என்ற தனது வருத்தத்தை அவர் தற்போது பதிவு செய்துள்ளார்.

 இதுதான் நடைமுறை

இதுதான் நடைமுறை

தான் தற்போது விளையாடிய ஜோஸி ஸ்டார்ஸ் அணியிலிருந்து விலகியுள்ள கிறிஸ் கெய்ல், ஜோஸி ஸ்டார்ஸ் அணியில் மட்டுமின்றி, பொதுவாகவே சரியாக விளையாடவில்லை என்றால் நமக்கு மரியாதை கிடைக்காது என்று கூறியுள்ளார்.

 சரியான மரியாதை கிடைக்காது

சரியான மரியாதை கிடைக்காது

இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், சக வீரர்கள், நிர்வாகம், நிர்வாக தலைமை போன்ற இடங்களில் நமக்கு மரியாதை கிடைக்காது. மோசமான வீரர் என்று பெயர் பெற்றுவிடுவோம் என்றும் கிறிஸ் வருத்தம் தெரிவித்தார்.

 வெற்றி நிச்சயமற்ற அணி

வெற்றி நிச்சயமற்ற அணி

தான் தற்போது விளையாடிய ஜோஸி ஸ்டார்ஸ் அணி ஒன்றும் சாம்பியன் அணி இல்லை என்று தெரிவித்துள்ள கிறிஸ் கெய்ல், அங்கு வெற்றி நிச்சயமற்ற சூழலே நிலவியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 கடந்த ஆண்டில் மகிழ்ச்சி

கடந்த ஆண்டில் மகிழ்ச்சி

தான் பணத்திற்காக விளையாட வரவில்லை என்று தெரிவித்துள்ள கிறிஸ் கெய்ல், கடந்த ஆண்டு, இந்த அணியில் மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் நிரம்பியிருந்தது என்று தெரிவித்துள்ளார். தான் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என்று முன்பே தெரிவித்திருந்ததாகவும், அதையே தற்போது செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 26, 2019, 11:43 [IST]
Other articles published on Nov 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+