For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனுஷ்காவை சந்திச்சு இருக்காவிட்டால், எனக்குள்ள இந்த நல்ல மாற்றம் இருந்திருக்காது

மும்பை : தன்னை ஒரு சிறப்பான மனிதனாக மாற்றியதற்கான முழு புகழும் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவையே சேரும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட ஓபன் நெட்ஸ் வித் மயங்க் நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி தன்னுடைய வாழ்க்கை, கேரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஒரு விளையாட்டு வீரராக என்னுடைய பொறுப்பு, மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பது உள்ளிட்ட விஷயங்களை அனுஷ்காவிடம் இருந்தே தான் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையை இனிமையாக கழிக்கும் ஜோடி

வாழ்க்கையை இனிமையாக கழிக்கும் ஜோடி

கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் மனமொத்த தம்பதிகளாக வலம்வந்துக் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஆதர்ச தம்பதிகளாகவும் இவர்கள் உள்ளனர். தங்களது கேரியரில் ஒருவருக்கொருவர் இந்த ஜோடி சரியாக உதவி செய்துக் கொண்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொண்டுள்ளனர்.

விராட்டை மாற்றிய அனுஷ்கா

விராட்டை மாற்றிய அனுஷ்கா

தன்னுடைய மனைவி குறித்து எப்போதுமே விராட் கோலிக்கு பெருமிதம் உண்டு. அதை அவ்வப்போது பல்வேறு பேட்டிகளின்போது வெளிப்படுத்தி விடுவார். அதேபோல தற்போது சக வீரர் மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட 'ஓபன் நெட்ஸ் வித் மயங்க்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி, அனுஷ்கா சர்மாவை தான் சந்தித்திருக்காவிட்டால், தான் தற்போது இருப்பதுபோல சிறப்பாக இருந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

முழுபுகழும் அனுஷ்காவிற்கே

முழுபுகழும் அனுஷ்காவிற்கே

தன்னை சிறப்பான மனிதனாக மாற்றியதற்கான முழு புகழும் தன்னுடைய மனைவி அனுஷ்காவையே சேரும் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரராக தன்னுடைய பொறுப்பு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது உள்ளிட்ட விஷயங்களை அனுஷ்காவிடம் இருந்தே தான் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கேக் செய்து கொடுத்த விராட்

கேக் செய்து கொடுத்த விராட்

மற்றவர்களுடன் மனம்விட்டு பேசும் பழக்கம் இல்லாத தன்னை சிறப்பான மனிதனாக மாற்றியது அனுஷ்காதான் என்றும் விராட் பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கடந்த வாரம் பேசிய விராட் கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்காவின் பிறந்த தினத்தில் அவருக்கு தான் ஒரு கேக்கை தயார் செய்து கொடுத்ததையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்.

Story first published: Tuesday, July 28, 2020, 17:18 [IST]
Other articles published on Jul 28, 2020
English summary
Virat Kohli had revealed that he baked a cake for Anushka on her birthday
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+