Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ச்ச.. ஒரு லட்சம் ரன்கள் போச்சே”.. சச்சின் ஆசைக்கு தடையாக இருந்த ரூல்ஸ்.. பாக். வீரர் சுவாரஸ்ய தகவல்

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்த நிலையில், சச்சினின் சாதனையை கோலி உள்ளிட்ட வீரர்கள் கடந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், புதிய விதிகள் காரணமாக தான் இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் ரன்களை வாரி கொடுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் ரன்

ஒரு லட்சம் ரன்

ரவி சாஸ்த்ரியுடன் சோயிப் அக்தர் நடத்திய உரையாடலில், இப்போது இருக்கும் ஒரு இன்னிங்சில் 3 டி.ஆர்.எஸ். விதிகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு லட்சம் ரன் அடித்திருப்பார் என்று தெரிவித்தார். பெரும்பாலும் சச்சினுக்கு நடுவர்கள் தவறான முடிவை வழங்கிவிடுவார்கள். இதை மனதில் வைத்தே அக்தர் இப்படி கூறியுள்ளார்.

சாதகமான விதிகள்

சாதகமான விதிகள்

தற்போது புதியதாக 2 பந்துகள் வழங்கப்படுகிறது. . இது பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விஷயம், ரிவர்ஸ் ஸ்விங் என்ற முறையே தற்போது ஒருநாள் போட்டியில் இல்லை. 3 ரிவ்யூ தருகிறார். ஃபில்டிங் முறையில் மாற்றம் என பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிகளாக அமைந்துள்ளதாக சோயிப் அக்தர் குற்றம் சாட்டினார்.

சிறந்த பேட்ஸ்மேன்

சிறந்த பேட்ஸ்மேன்

சச்சினை நினைத்து தாம் மிகவும் பரிதாப படுகிறேன். சச்சின் அவரது காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்,, பிரட் லீ, வார்னே, முரளிதரன், நான் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடினார். அதனால் தான் சச்சினை எப்போதும் சிறந்த வீரர் என்று குறிப்பிடுவேன்.ஆனால் நிலைமை அப்படி இல்லை என்று கூறினார்

Recommended Video

Sachin Tendulkar Weighs In On India's World Cup Chances Under Rohit - Dravid | Oneindia Tamil
2 பவுண்சர்கள்

2 பவுண்சர்கள்

சோயிப் அக்தரின் இந்த பேச்சுக்கு உண்மை தான் என்று கூறிய ரவி சாஸ்த்ரி, பந்துவீச்சாளர்களுக்கு ஒரு ஓவரில் 2 பவுண்சர்களை வீச அனுமதி அளிக்க வேண்டும். அப்போது தான் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியத்தும் இருக்கும் என்று கூறினார்.

Story first published: Saturday, January 29, 2022, 18:39 [IST]
Other articles published on Jan 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+