Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோலியின் டெஸ்ட் கேப்டன்சிக்கு நான் தீவிர ரசிகன்".. பேட்டிங் ரகசியம் பற்றி ரோஹித் சர்மா ஓபன் டாக்

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு தான் ஒரு தீவிர ரசிகன் என்று ரோஹித் சர்மா மனம் திறந்து பாராட்டியுள்ளார். மேலும் இருவரும் தங்களது பேட்டிங் தவறுகளை எப்படி திருத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்தும், கோலியின் லண்டன் வாழ்க்கை குறித்தும் அவர் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி தான். 2014 முதல் 2022 வரை 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய கோலி, 40 வெற்றிகளை குவித்து 58.82 சதவீத வெற்றி விகிதத்துடன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தோனி 60 போட்டிகளில் 27 வெற்றிகளை பெற்றுள்ளார். ரோஹித் சர்மா 2022 முதல் 2024 வரை 24 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி 12 வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.

I m a Huge Fan of Virat Kohli s Test Captaincy says Rohit Sharma on his Batting Secrets

கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், "இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்ற பிறகு செய்த சாதனைகள் அசாத்தியமானவை. அணியை அவர் வழிநடத்திய விதம் அற்புதமானது. கேப்டனாக அவர் சாதித்த விஷயங்களை நான் எப்போதும் மனதார பாராட்டுவேன்." என்றார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் ஒன்றாக விளையாடி வரும் இருவருக்கும் இடையே எப்போதும் பரஸ்பர மரியாதையும் புரிதலும் உண்டு என்று ரோஹித் சுட்டிக்காட்டினார். "எங்கள் இருவருக்குள்ளும் நல்ல விஷயங்களை பாராட்டிக் கொள்ளும் பழக்கம் எப்போதுமே உண்டு. கேப்டன்சி விவாதங்களை தாண்டி, எங்கள் தனிப்பட்ட பேட்டிங்கை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து நாங்கள் அதிகம் பேசுவோம்.

"எனது பேட்டிங்கில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால் கோலி உடனடியாக என்னிடம் வந்து சொல்வார். அதேபோல் அவரது பேட்டிங்கில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் நான் சுட்டிக்காட்டுவேன். ஒருவருக்கொருவர் உதவி செய்து பேட்டிங்கை மெருகேற்றும் உரையாடல் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்றார்.

சிஎஸ்கே அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் இவர்தான்.. ஜாகீர் கானைத் தொடர்ந்து உள்ளே வந்த மோஹித்

சிஎஸ்கே அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் இவர்தான்.. ஜாகீர் கானைத் தொடர்ந்து உள்ளே வந்த மோஹித்

லண்டன் வீடு குறித்து சுவாரஸ்ய பேச்சு

கிரிக்கெட்டைத் தாண்டி இருவரும் இப்போது அடிக்கடி சந்திப்பதில்லை என்பது குறித்து சிரித்துக் கொண்டே பேசிய ரோஹித், "இப்போது நாங்கள் கிரிக்கெட் இல்லாத நேரங்களில் சந்திப்பது மிகவும் குறைவுதான். ஏனென்றால் கோலியின் வீடு இப்போது என் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் லண்டனில் இருக்கிறது. மேலும் ஒரு மாதத்திற்கு அல்லது ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒருநாள் தொடர்கள் நடப்பதால் சந்திப்புகள் குறைவாகவே உள்ளன.

ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஒவ்வொரு 5 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருந்தோம். அப்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது. ஆனால் இப்போது நாங்கள் இருவருமே குடும்பத்துடன் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறோம், இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்" என்று கூறினார்.

Story first published: Tuesday, September 29, 2026, 16:05 [IST]
Other articles published on Sep 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+