Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IMLT20-தெறிக்கவிட்ட சச்சின்.. 7 சிக்சர்களை பறக்கவிட்ட யுவ்ராஜ் சிங்.. ஆஸ்திரேலியாவை ஓட விட்ட இந்தியா

ராய்ப்பூர்: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்திய மாஸ்டர்ஸ் அணி கேப்டனாக சச்சின் டெண்டுல்கரும், ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியின் கேப்டனாக வாட்சனும் செயல்பட்டனர். ராய்ப்பூரில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

India masters

இதனை அடுத்து களமிறங்கிய 51 வயதான சச்சின் டெண்டுல்கர் வழக்கம் போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு ஐந்து ரன்களில் வெளியேற,பவன் நெகி 14 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து சச்சினும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். சச்சின் ஏழு பவுண்டரிகள் விளாசி 30 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 144 என்ற நிலையில் இருந்தது. மறுமுனையில் யுவராஜ் சிங் தன்னுடைய வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். 26 பந்துகளில் யுவராஜ் சிங் அரை சதம் கடந்தார். ஏழு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 30 பந்துகளில் யுவராஜ் சிங் 59 ரன்கள் சேர்த்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 196 என்ற அளவில் இருந்தது.

ஸ்டுவர்ட் பின்னி 36 ரன்களும் யூசுப் பதான் 10 பந்துகளில் 23 ரன்களும், இர்பான் பதான் 7 பந்துகளில் 19 ரன்களும் விளாச இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் வாட்சன் 5 ரன்களிலும், ஷான் மார்ஷ் 21 ரன்களும், பென் டங் 21 ரன்களும், நாதன் 21 ரன்களும், பென் கட்டிங் 39 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் 18 புள்ளி 1 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 126 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஷாபாஸ் நதீம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் அணி மார்ச் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

Story first published: Friday, March 14, 2025, 10:12 [IST]
Other articles published on Mar 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+