Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் அடித்த ஷாட்..!! கடுப்பான பொலார்ட்..!! கோலி- ரோகித் கொண்டாட்டம்..!! IND vs WI சுவாரஸ்யங்கள்

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக பொலார்ட், கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார்.

கேப்டன் என்ற பொறுப்பில் இருக்கும் அவர், அதற்கு தகுந்தால் போல் விளையாடாமல் டக் அவுட், 2 ரன்கள், 1 ரன்கள் என்று ஆட்டமிழந்து வருகிறார்.

ரோகித் பாடம்

ரோகித் பாடம்

தோல்விக்கு காரணம் என்ன என்று கேட்டால் இளம் வீரர் சரி இல்லை, அவர் சரியில்லை என்று சாக்கு போக்கு சொல்லி வருகிறார். இந்த நிலையில், கேப்டன் என்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்தினார் ரோகித் சர்மா. அணிக்காக முதன்மையாக நின்று ரன் அடித்தார்.

பேட்டிங் மூலம் பதில்

பேட்டிங் மூலம் பதில்

குறைந்த இலக்கை தான் துரத்த வேண்டும் என்றாலும் கூட, ரோகித் அதிரடியை காட்டினார். இதனை பார்த்த பொலார்ட், ரோகித் சர்மாவை ஸ்லேஜ் செய்ய முயன்றார். ஆனால் அதற்கு ரோகித் தொடர்ந்து பேட்டால் தான் பதில் சொன்னார்.

வம்பிழுத்த பொலார்டு

வம்பிழுத்த பொலார்டு

ஒரு கட்டத்தில் ரோகித் அடித்த ஷாட்டை கண்டு கடுப்பான பொலார்ட், அவரை பார்த்து முறைத்தார். ஆனால் ரோகித் சர்மா அதனை கண்டு கொள்ளவே இல்லை. இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடுகிறார்கள் என்பதால், இத வெறும் நட்பு ரீதியான ஸ்லஜிங் ஆக இருந்திருக்கலாம்.

ரோகித்- கோலி

ரோகித்- கோலி

இந்த நிலையில், ரோகித் சர்மாவை பார்த்தாவது பொலார்ட் திருந்த வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதே போன்று மேற்கிந்திய தீவுகள் விக்கெட்டை வீழ்த்திய போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் கட்டியணைத்து கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ஃபில்டிங் செட் பண்ணுவதிலும் கோலியின் ஐடியாவை ரோகித் ஃபாலோ செய்தார்.

ரோகித் டி.ஆர்.எஸ்.

ரோகித் டி.ஆர்.எஸ்.

இதே போன்று இந்த போட்டியில் இந்தியா பந்துவீசும் போது நடுவர் மூன்று முறை தவறாக நாட் அவுட் வழங்கினார். அதனை மூன்று முறையும் மறு பரிசீலினை செய்த ரோகித் சர்மா, மூன்றிலும் வெற்றி கண்டார். இதனை பார்த்த கவாஸ்கர் தோனிக்கு பிறகு டி. ஆர்.எஸை ரோகித் சர்மா சிறப்பாக பயன்படுத்துவதாக பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Sunday, February 6, 2022, 21:44 [IST]
Other articles published on Feb 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+