Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs NZ A: ஜெய்ஸ்வால் அபார சதம்..2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்தியா ரன் குவிப்பு

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. 4-ஆம் நாள் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்தியா ஏ அணி 38.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாடிய யஷ் ரத்தோட் 52 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து களத்தில் உள்ளார். இந்த இருவரின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா ஏ அணி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.

Yashasvi Jaiswal

இந்த தொடரில் முதல் 3 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் தடுமாறி வந்தார். ஆனால், இந்த இன்னிங்சில் அவர் தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். பவுண்டரி, சிக்சர் என ஜெய்ஸ்வால் பறக்கவிட, இந்திய அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. நியூசிலாந்து ஏ அணியை விட 100 ரன்கள் கூடுதலாக எடுத்தது. இன்னும் கைவசம் விக்கெட் உள்ள நிலையில், இந்தப் போட்டியும் சமனில் முடிவடையலாம்.

IND vs NZ: இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 ஆல்ரவுண்டர்.. முதல் ஒருநாள் போட்டி குறித்து அஸ்வின் கருத்து

IND vs NZ: இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 ஆல்ரவுண்டர்.. முதல் ஒருநாள் போட்டி குறித்து அஸ்வின் கருத்து

முன்னதாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாரோட் மெக்கே பந்துவீச்சில் டிம் ராபின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல், பிரெட் ரேண்டல் வீசிய பந்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே Golden Duck ஆகி வெளியேறினார்.

IND vs NZ: டி20 தொடரில் இந்தியா 4-1 என தோற்றிருக்க வேண்டும்.. உண்மையை மூடி மறைக்காதீங்க- அஸ்வின் தாக்கு

Also Read

IND vs NZ: டி20 தொடரில் இந்தியா 4-1 என தோற்றிருக்க வேண்டும்.. உண்மையை மூடி மறைக்காதீங்க- அஸ்வின் தாக்கு

இந்திய ஏ அணி தொடரில் தற்போது தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ஜெய்ஸ்வால் என 3 வீரர்களும் சதம் அடித்து, நல்ல பயிற்சியை பெற்றுள்ளனர். இதனால், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய பேட்டர்கள் ரன் குவித்து அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதிபெற, இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாகும்.

Story first published: Tuesday, November 3, 2026, 7:33 [IST]
Other articles published on Nov 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+