Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: வைபவ் சூர்யவன்ஷி அதிரடி நீக்கம்.. பும்ரா உள்ளிட்ட 2 ஸ்டார்கள் கம்பேக்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரை ஆப்கானிஸ்தான் நடத்துகிறது என்றாலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடக்கிறது. இந்த மூன்று டி20 போட்டிகள் அனைத்தும் டெல்லியில் நடைபெறுகிறது.

இதில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த போட்டியில் முதலில் நாங்கள் பந்து வீச இருக்கின்றோம்.

jasprit bumrah

நாங்கள் எப்போதெல்லாம் டெல்லியில் விளையாடுகிறோமோ, அப்போதெல்லாம் ஆடுகளம் எங்களுக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும். இங்கு முதலில் பந்து வீசுவது சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஜிம்பாப்வே தொடரில் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் இருந்தது. அதனை இந்த தொடரிலும் தொடங்குவோம்.

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்.. தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல- ஸ்ரேயாஸ் ஐயர்

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்.. தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல- ஸ்ரேயாஸ் ஐயர்

பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருக்கின்றார். இன்றைய ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்சி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் இப்ராஹிம் சாட்ரான், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.

தற்போது பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க நாங்கள் முயற்சி செய்வோம். இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை இந்தியாவில் நாங்கள் நடத்துகிறோம் என்பதை ஒரு பெருமையான விஷயமாக இருக்கின்றது. நாங்கள் ஒரு நல்ல தொடரை அவர்களுக்கு எதிராக விளையாட முயற்சி செய்வோம்.

எங்கள் நண்பர்கள் இடமிருந்து நல்ல ஒரு ஆதரவு கிடைத்திருக்கிறது. எங்களுடைய ரசிகர்கள் அதிகளவு இங்கு வந்திருப்பது எங்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது என்று ஆட்டத்தில் நவீன் விளையாடவில்லை. அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது குறித்து யோசிப்போம் என்று இப்ராஹிம் சார்டன் கூறினார்.

IND vs AFG: இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைக்க தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி

Also Read

IND vs AFG: இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைக்க தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி

இந்திய அணியில் பும்ரா, அணிக்கு திரும்பிருக்கிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே என இரண்டு ஆல்ரவுண்டர்களும் விளையாடுகின்றனர். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இசான் கிசன் பயிற்சியின் போது காயம் அடைந்தாலும் அவர் முதல் டி20 போட்டிகளில் விளையாடுகிறார்.

Story first published: Sunday, September 13, 2026, 19:21 [IST]
Other articles published on Sep 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+