வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டது முட்டாள்தனமான முடிவு.. கம்பீரை வெளுக்கும் ரசிகர்கள்
மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்சி சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஜிம்பாப்வே தொடரில் தன்னுடைய திறமையை சூரிய வன்சி நிரூபித்த பிறகும் அவருக்கு அணியில் இடம் தரப்படாதது ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது.
கடந்த ஜிம்பாப்வே தொடரில் வைபவ் சூரியவன்சி முதல் டி20 போட்டியில் 50 ரன்கள், இரண்டாவது t20 போட்டியில் 20 ரன்களும், மூன்றாவது டி20 போட்டியில் 81 ரன்களும் விளாசினார். இதன் மூலம் வைபவ் சூரியவன்ஷிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் உலகின் முன்னணி வீரராக அறியப்பட்ட அபிஷேக் ஷர்மா தடுமாறினார்.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா நீக்கப்பட்டு வைபவ் சூரியவன்சிக்கு சஞ்சு சாம்சுனுடன் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வைபவ் சூர்யவன்ஷி, இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை அவர் முழு முதல் தகுதியுடன் இருந்த நிலையிலும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
இதற்கு முன் நடந்த துலீப் கோப்பை தொடரில் அரை இறுதியில் 92 ரன்கள் மற்றும் 40 ரன்கள் இறுதிப்போட்டியில் 44 மற்றும் 8 ரன்களை அவர் விளாசி இருந்தார். எனினும் துலீப் கோப்பை முடிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது என்பதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறதா இல்லை வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்க இந்திய அணி நிர்வாகம் மறுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைபவ் சூரியவன்சி போன்ற ஒரு தலைமுறையின் சிறந்த வீரர் தொடர்ந்து விளையாடினால் தான் அவருடைய உத்வேகம் அதிகரிக்கும். தொடர் நாயகன் விருது வென்ற ஒரு வீரரை அணியிலிருந்து நீக்குவது மிகவும் தவறான ஒரு விஷயம் என்று ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பயிற்சியாளராக கம்பீர் வந்ததிலிருந்து இது போன்ற முட்டாள்தனமான முடிவை எடுப்பதாகவும், இது வீரர்களை அழிக்கும் செயல் என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications


