பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கும் முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி தொடர் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய அணியை எதிர்கொள்ளும் போது பனிப்பொழிவின் போது இரண்டாவதாக பந்து வீசுவது என்பது கடினமான முடிவாகும். ஆனால் இதனை எளிய அணியுடன் தொடரை வென்று பிறகு செய்வது என்பது முக்கியம்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் முதலில் பந்துவீச்சை செய்தோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறோம். என்னுடைய முடிவு ஆடுகளத்தை பொறுத்து கிடையாது.
உலகக் கோப்பை முன்பு பல சூழல்களில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக இந்த மாற்றத்தை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த தொடரில் எங்களுடைய பல பாக்ஸ்களை நாங்கள் டிக் செய்து விட்டோம். இன்றைய போட்டியில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றம் செய்திருக்கிறோம். அக்சர்பட்டேல், ஜித்தேஷ் சர்மா, ஆர்ஸ்தீப் சிங் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஆவேஷ் கான், குல்திப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராகிம் சார்டன் இந்த தொடர் முழுவதுமே இழந்து விட்டதாக கூறியுள்ளார். எனினும் இன்றைய ஆட்டத்தில் தாங்கள் முதலில் பந்து வீச தான் இருந்தோம். இந்த தொடரில் எங்களுக்கு சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இன்றைய போட்டியிலும் சில நல்ல விஷயம் நடக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் ஒன்பது முறை ஒரு அணியை ஒயிட் வாஷ் செய்தது என்ற உலக சாதனை சொந்தமாகும்.