IND vs AFG 3rd T20 - பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு? பிளானை மாற்றும் ரோகித் சர்மா
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் சம்பிரதாய ஆட்டமாக நாளைய போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றத்தை மேற்கொள்ள ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார். இந்திய அணி t20 உலக கோப்பை தொடருக்கு முன்பு விளையாடப் போகும் கடைசி சர்வதேச டி20 போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவன் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜித்தேஷ் சர்மாவுக்கு தான் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.இதனால் ஜித்தேஷ் சர்மாவை நீக்கிவிட்டு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் களமிறக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று பந்துவீச்சை பொறுத்தவரை ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த இரண்டு மாற்றங்களும் நாளைய போட்டியில் நிகழும். இதுபோன்று ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வளிக்கப்பட்டு கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
ஆனால் ஜெய்ஸ்வால் நன்றாக விளையாடி வருவதால் அவருக்கு கடைசி போட்டியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்க ரோகித் சர்மா ஆர்வம் காட்டி வருகிறார். இதேபோன்று இந்த தொடரில் பெரிய அளவில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக பேட்டிங் வரிசை மாற்றப்படும் என்றும் தெரிகிறது.
நாளைய ஆட்டத்தில் சில எக்ஸ்பிரிமெண்ட்களை இந்தியா மேற்கொள்ளும். ஆனால் போட்டியின் முடிவு பாதிக்காத வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. சஞ்சு சாம்சன் நாளைய போட்டிக்கு திரும்புவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Story first published: Tuesday, January 16, 2024, 20:38 [IST]
Other articles published on Jan 16, 2024


Click it and Unblock the Notifications